உங்களுக்கு வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?.. 2021-ல் நடந்ததை மறந்துட்டீங்களா?.. திமுகவுக்கு செக் வைத்த EPS..!

By Nanthini on ஆடி 8, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தன்னுடைய பிரச்சார பயணத்தை நேற்று தொடங்கினார். மேட்டுப்பாளையம் பகுதியில் ரோடு சோவில் பங்கேற்ற அவர் பிரச்சார வேனில் நின்றவாறு பொதுமக்களிடம் பேசினார். அப்போது, அதிமுக கூட்டணிக்கு மக்கள் அளிக்கும் ஆதரவு என்பது வெள்ளத்தில் நீந்தி வந்து பிரச்சாரம் செய்யும் அளவுக்கு உள்ளது.

கோவை மக்களின் இந்த ஆதரவை பார்த்திருந்தால் முதல்வருக்கு கலக்கம் ஏற்பட்டிருக்கும். இதன் மூலம் வருகின்ற சட்டசபை தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என்பது உறுதியாகி உள்ளது. மக்கள் விரோத ஆட்சி அகற்றப்பட வேண்டும், தீய சக்தி திமுகவை அடுத்த ஆண்டு தேர்தலில் வீழ்த்துவோம், வெற்றி பெறுவோம், நல்லாட்சியை மீண்டும் தமிழகத்தில் கொண்டு வருவோம். கூட்டணிக்கு அதிமுகவை பாஜக அடிப்படையை செய்தது என முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார்.

   

அவருக்கு ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். 2001 சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது என்பது வரலாறு. திமுகவுடன் சேர்ந்தால் பாஜக நல்ல கட்சி, அதுவே அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தால் பாஜக மதவாத கட்சி. இதைத் தவிர வேறு ஒன்றும் தெரியாது. நாட்டுக்கு நல்ல திட்டங்கள் தரும் பாஜகவுடன் கூட்டணி வைப்பதில் என்ன தவறு. திமுகவை பொருத்தவரை குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருக்க வேண்டும். அதன் மூலம் கொள்ளையடிக்க வேண்டும். இதுதான் திமுகவின் குறிக்கோள் என்று இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.