தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஒரு சில மாதங்கள் மட்டும் இருப்பதால் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. ஒரு பக்கம் தேர்தல் பிரச்சாரம் மறுபக்கம் கூட்டணி பேச்சு வார்த்தை என அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் இறங்கியுள்ளன. அதேசமயம் ஒரு சில கட்சிகள் இதுவரை கூட்டணி கட்சிகள் குறித்து அறிவிப்பை வெளியிடாமல் உள்ளன.
அதன்படி பாமகவில் தொடர்ந்து தந்தை மகனிடையே மோதல் நீடித்து வருவதால் கூட்டணி குறித்து அறிவிப்பு இதுவரை வெளியாகாமல் உள்ளது. இந்நிலையில் ராமதாசுடன் இபிஎஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராமதாசை நேரில் சந்தித்து இபிஎஸ் உடல்நலம் குறித்து விசாரித்த நிலையில் இருவரும் தனிமையில் 30 நிமிடங்கள் கூட்டணி பற்றி பேசியதாகவும் கூறப்படுகிறது. தனிமையில் பேசியதை உறுதிப்படுத்திய அருள் எம்எல்ஏ, இருவரும் என்ன பேசினார்கள் என்பது தனக்கு தெரியாது என்று முகநூலில் பதிவிட்டுள்ளார்.
