சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நடிகை நயன்தாரா வீட்டுக்கு இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, விரைந்து வந்த காவல்துறையினர் மோப்பநாய் உதவியுடன் அங்கு தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். சமீபத்தில், கவர்னர் ரவி, CM ஸ்டாலின், விஜய், த்ரிஷா, ஆகியோரது வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. ஆனால், போலீசார் சோதனையின் முடிவில் புரளி என்பது தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.
