தமிழ் சினிமாவில் என்றும் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பதை சொல்லி தான் தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை.
தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார். இன்னும் சொல்லப்போனால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டமும் இவருக்கு உள்ளது. நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடிக்கும் போது இவருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது.
அந்த காதல் அப்படியே பாதியில் முடிந்து விடும் என்று பலர் கூறி வந்த நிலையில் அவர்களின் அன்பை நிரூபிக்கும் விதமாக திருமணம் செய்து கொண்டனர்.
தற்போது இந்த தம்பதிகளுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். என்னதான் சினிமாவில் பிஸியாக இருந்தாலும் தனது குழந்தைகளையும் குடும்பத்தையும் கவனித்துக் கொள்ளும் நயன்தாரா அடிக்கடி தனது குழந்தைகளுடன் நேரம் செலவிடும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் தற்போது குழந்தைகளுக்காக நேரம் செலவிட்டு விளையாடும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நயன்தாரா பகிர்ந்துள்ளார்.
அந்தப் பதிவில், வேலைக்கு செல்லும் முன்னர் சில மணி நேரங்கள் அன்பைப் பொழிந்த போது என்று கேப்ஷனை இந்த புகைப்படங்களுடன் அவர் பதிவிட்டுள்ளார்.