இந்தியாவே திரும்பி பார்க்கும் KVN புரொடக்ஷன்.. அதன் லைன் அப்பில் இருக்கும் பிரம்மாண்ட பட்ஜெட் படங்கள்..!!

By admin on ஆவணி 12, 2024

Spread the love

பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் ப்ரொடக்ஷன்ஸ் சகத் திரைப்படம் மூலம் தனது பயணத்தை ஆரம்பித்தது. அதன் பிறகு  RRR, சீதாராமன் அவதார புருஷா, கல்கி 2898 AD உள்ளிட்ட படங்களை இயக்கி முன்னணி தயாரிப்பு நிறுவனமாக உள்ளது. இந்த நிலையில்  பிரம்மாண்ட பட்ஜெட் படங்களை கே.வி.என் நிறுவனம் தயாரித்து வருகிறது. அந்த படங்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

KVN PRODUCTIONS - YouTube

   

தேவாரா:
ஸ்ரீதேவி மற்றும் போனி கபூரின் மூத்த மகளான ஜான்வி கபூர் கோலமாவு கோகிலா படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடித்தார். தற்போது ஜூனியர் என்டிஆர் உடன் இணைந்து தெலுங்கில் தேவாரா திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் கொரடால சிவா இயக்குகிறார். அனிருத் அமைக்கிறார். இந்த படத்தில் நந்தமுரி கல்யாண் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

   

Jr NTR heads to Goa for Devara: Part 1 shooting schedule - India Today

 

டாக்சிக்:
பிரபல மலையாள இயக்குனர் கீது மோகன் தாஸ் இயக்கத்தில் டாக்சிக் திரைப்படம் உருவாகிறது. இந்த படத்தில் கே.ஜி.எஃப் புகழ் யஷ் நடிக்கிறார். இந்த படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரிக்கிறது. ஹீரோவின் அக்கா கதாபாத்திரத்தில் நயன்தாராவும், கதாநாயகியாக கியாரா அத்வானியும் நடிக்கின்றனர். மேலும் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும் படத்தில் நடிக்கிறார்.

TOXIC Official Trailer - Rocking Star Yash | Geetu Mohandas | Monster Mind  Creations ( Fan-Made ) - YouTube

கே.டி தி டெவில்:
இந்த படத்தில் துருவா சர்ஜா ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் ரிஷ்மா நானய்யா, சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி, ரவிச்சந்திரன், ரமேஷ் அரவிந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் இந்த படத்தை கன்னட இயக்குனர் பிரேம் இயக்குகிறார். அர்ஜுன் ஜென்யா இசை அமைக்கிறார். இந்த திரைப்படத்தையும் கே வி என் நிறுவனம் தயாரிக்கிறது.

KD – The Devil - Wikipedia