LOVE FAILURE பத்தி பேசுவதா..? “வீட்டுக்கு வா உனக்கு சர்பிரைஸ் இருக்கு” சகோதரியை 50 முறை கத்தியால் குத்தி கொன்ற இன்ஜினியர்… 24 மணி நேரத்தில் தூக்கிய போலீஸ்…!!

By Soundarya on பங்குனி 15, 2026

Spread the love

உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தில், 25 வயது மென்பொருள் பொறியாளர்  ஹர்திக் மல்கோத்ரா என்பவர் தனது இரட்டை சகோதரி ஹிம்ஷிகாவை கத்தியால் குத்திக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. குருகிராமில் பணியாற்றி வந்த இவர்கள் இருவரும் ஹோலி பண்டிகைக்காகத் தங்களது வீட்டிற்கு வந்திருந்தபோது இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளது. சகோதரிக்கு சுமார் 50 முதல் 84 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்ததாக உடற்கூறாய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.

காதல் விவகாரம் மற்றும் வேலை தொடர்பான அறிவுரைகளைச் சகோதரி வழங்கியதே இந்தத் தாக்குதலுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. சமூக வலைதளம் மூலம் புனேவைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்து வந்த ஹர்திக், ஒரு வருடத்திற்கு முன்பு தனது வேலையை விட்டுவிட்டு எப்போதும் கைபேசியிலேயே மூழ்கிக் கிடந்துள்ளார். இதனைச் சகோதரியும் தாயும் கண்டித்து, மீண்டும் வேலையில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவர் இக்கொலையைச் செய்துள்ளார்.

   

கொலைக்குப் பிறகு, தனது தாயிடம் நேரில் சென்று “வீட்டிற்கு வாருங்கள், உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் (Surprise) காத்திருக்கிறது” என்று கூறி அழைத்து வந்துள்ளார். வீட்டிற்கு வந்த தாய் ரத்த வெள்ளத்தில் கிடந்த மகளைக் கண்டு அலறியபோது, ஹர்திக் அவரையும் கத்தியால் தாக்கியுள்ளார். படுகாயமடைந்த தாய் தற்போது சிகிச்சையில் உள்ள நிலையில், தப்பி ஓடிய ஹர்திக்கை 24 மணி நேரத்திற்குள் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்