“அந்த சாதிக்காரி எனக்கு மருமகளா”… மனைவியை வீட்டுக்குள் விட மறுத்த தந்தை… ஆத்திரத்தில் பெற்றோரைக் கொன்று ரம்பத்தால் அறுத்து துண்டு போட்ட மகன்…!

By Nanthini on மார்கழி 19, 2025

Spread the love

உத்திரபிரதேசம் மாநிலம் ஜான்பூர் பகுதியில் 60 வயதை கடந்த தம்பதியினர் காணாமல் போனதாக போலீசுக்கு புகார் வந்துள்ளது. இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் ஒரு தந்தையின் பிடிவாதமும் மகனின் ஆத்திரமும் எப்படி ஒரு மிகப்பெரிய துயரத்தில் முடிந்தது என்பது குறித்த திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தது. தியாம் பகதூர் மற்றும் அவருடைய மனைவி பாபிதா ஆகிய இருவரையும் அவர்களுடைய சொந்த மகனான அம்பேஸ் என்ற பொறியாளர் அடித்து கொலை செய்து பிறகு உடல்களை ரம்பத்தால் துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசி எது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு பிறகு ஒரு மதமாற்று திருமண பிரச்சனையும் வந்துள்ளது.

பொறியாளர் ஆன அம்பேஷ், ஐந்து வருடங்களுக்கு முன்பு ஒரு இஸ்லாமிய பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் ரயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்ற அவருடைய தந்தை பகதூர் அந்தப் பெண்ணை தனது மருமகளாக ஏற்றுக் கொள்ள முடியாமல் மறுத்துவிட்டார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தும் அந்தப் பெண்ணை வீட்டுக்கு அனுமதிக்க அவர் கடைசி வரை சம்மதிக்கவில்லை. இதனால் தந்தைக்கும் மகனுக்கும் இடையே நீண்ட காலமாகவே மனக்கசப்பு இருந்துள்ளது. தொடர்ந்து குடும்ப அழுத்தத்தால் அபிஷேக் தன்னுடைய மனைவியை பிரிய முடிவு செய்தார்.

   

இதற்காக தன்னுடைய மனைவியிடம் பேசியபோது அவர் விவாகரத்து பணமாக 5 லட்சம் ரூபாய் கேட்டு உள்ளார். இந்த தொகையை தருமாறு தனது தந்தையிடம் அபிஷேக் கோரிக்கை விடுத்தார். ஆனால் அவருடைய தந்தை பணம் தர மறுத்து பிடிவாதமாக இருந்ததால் இருவருக்கும் வாக்குவாதம் வந்தது. அப்போது பாத்திரத்தில் அம்பேஸ் அங்கிருந்த கனமான அம்மிக்கல்லை எடுத்து தன்னுடைய தாயை தாக்கினார். அவர் அலறுவதைக் கண்டு உதவிக்கு ஓடிவந்த தந்தையையும் அவர் தாக்கினார்.

   

இதில் வயதான தம்பதியினர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். பெற்றோரை கொலை செய்த பிறகு தடயங்களை மறைக்க சிந்தித்தார். உடல்களை மறைக்க பெரிய பைகள் கிடைக்காததால் வீட்டில் இருந்த ரம்பத்தை எடுத்து தனது பெற்றோர் இருவரின் உடல்களை ஆறு துண்டுகளாக வெட்டினார். பிறகு அந்த துண்டுகளை சிறிய சாக்கு மூட்டையில் கட்டி ஆற்றுப்பகுதியில் வீசினார். அதன் பிறகு தனது சகோதரி வந்தனாவுக்கு தொலைபேசியில் அழைத்து பெற்றோர் கோபித்துக் கொண்டு வெளியே சென்று விட்டனர், நான் அவர்களை தேடி செல்கிறேன் என்று கூறிவிட்டு தனது கைபேசியை அணைத்து வைத்துள்ளார்.

 

அம்பேஸ் நடத்தையில் சந்தேகமடைந்த சகோதரி போலீசில் புகார் அளித்த நிலையில் சுமார் ஒரு வாரத்திற்கு பிறகு தலைமறைவாக இருந்த அம்பேஷை போலீசார் கைது செய்தனர். பிறகு அவரிடம் விசாரணை நடத்திய போது பெற்றோரை கொன்று ஆற்றில் வீசியதை ஒப்புக்கொண்டார். தற்போது உடல் பாகங்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வரும் நிலையில் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.