ஆரம்பத்தில் வெறும் ரூ.6,000 சம்பளம்… இப்போ 5 அடுக்குமாடி பங்களாக்கள், கட்டுக்கட்ட பணம், தங்கம்… லஞ்ச ஒழிப்புத்துறை வேட்டையில் சிக்கிய பொறியாளர் ரகசியம்..!!

Spread the love

ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டம் பாலிகுடாவில் அரசு உதவி பொறியாளராகப் பணியாற்றி வரும் பைகுந்த நாத் பெஹரா (52) என்பவரின் வீட்டில், அவர் வருமானத்திற்கு அதிகமாகக் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடிச் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் 2 லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 5 டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஊழியர்கள் அடங்கிய பெரிய குழுவினர் ஈடுபட்டனர்.

இச்சோதனையின் போது அதிகாரிகளால் 341 கிராம் தங்க நகைகள், ₹45 லட்சம் வங்கி வைப்புத்தொகை (டெபாசிட்) மற்றும் முக்கிய நகரங்களான புவனேசுவரம் சந்திரசேகர்பூர், சைலாஸ்ரீ, பாட்டியா, பாண்டுவா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஐந்து அடுக்குமாடி கட்டிடங்கள் இருப்பது கண்டறியப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஒரு சாதாரண அரசு ஊழியரின் வீட்டில் கட்டுக்கட்டாகப் பணமும், நகைகளும், சொகுசு பங்களாக்களும் பறிமுதல் செய்யப்பட்ட இந்தச் சம்பவம் அந்த மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1999 ஆம் ஆண்டு வெறும் ₹6,000 ஆரம்பச் சம்பளத்தில் பணியில் சேர்ந்த பைகுந்த நாத், பல்வேறு பணி மாறுதல்களைப் பெற்று 2016 இல் உதவி பொறியாளராகப் பதவி உயர்வு பெற்றார். மிகக் குறைந்த சம்பளத்தில் தன் வாழ்க்கையைத் தொடங்கி, குறுகிய காலத்தில் இவ்வளவு கோடிக்கணக்கான சொத்துக்களை அவர் எவ்வாறு சேர்த்தார் மற்றும் இதில் அவருக்கு உடந்தையாக இருந்த கூட்டாளிகள் யார் யார் என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரைத் தற்போது கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Soundarya

Recent Posts

பரபரக்கும் அரசியல்..! “கணவனை தேடும் மனைவியின் கதை”… தமிழ்நாட்டுக்கே தெரிஞ்ச கதை தான்… முதல்வர் விஜய்யை சீண்டிய உதயநிதி..!!

தமிழகச் சட்டப்பேரவை விவாதத்தின்போது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பேசியதற்கு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக முதன்மைச் செயலாளருமான உதயநிதி…

8 minutes ago

அவங்க கட்டுப்பாட்டில் தான இருக்கீங்க.. உங்க அப்பாவே சொன்னாரே.. முதல்ல உங்க குடும்பத்தை பாருங்க சார்… சிவசங்கர் விமர்சனம்..!!

தமிழகச் சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஆற்றிய உரைக்கு, திமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய…

13 minutes ago

நாங்க தவெக அரசுக்கு ஆதரவளிக்காமல் இருந்திருந்தால்… பதவியேற்றிருக்க முடியாது… இந்திய கம்யூனிஸ்ட் அதிரடி…!!

தமிழக வெற்றிக் கழக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தந்தது தாங்கள் சுயமாக எடுத்த முடிவு என்றும், இதில் எந்தவிதக்…

18 minutes ago

BREAKING: மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன் பதவியை ராஜினாமா செய்தார்… சற்றுமுன் பரபரப்பு..!!

மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்த ஜார்ஜ் குரியன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா…

23 minutes ago

பகீர் கிளப்பும் ரவி மோகன் வீட்டு விவகாரம்… நள்ளிரவில் போலீசாருக்கு வந்த அந்த ஒரு போன் கால்… போலீஸ் விசாரணையில் வெளியான ஷாக் தகவல்….!

சென்னை நீலாங்கரையில் உள்ள பிரபல நடிகர் ரவி மோகனின் வீட்டைச் சுற்றி தற்போது ஒரு புதிய சர்ச்சை வெடித்துள்ளது. அவரது…

58 minutes ago

திருச்செந்தூர் கோயிலில் திடீர் மாற்றம்…. ரூ.5,000-லிருந்து ரூ.30,000 ஆக உயர்ந்த கட்டணம்… பக்தர்கள் கடும் அதிர்ச்சி….!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அபிஷேகம், சண்முகார்ச்சனை, தங்கத்தேர் உலா உள்ளிட்ட முக்கியக் கட்டண சேவைகளின் விலையை பெருமளவில் உயர்த்த…

1 மணத்தியாலம் ago