அட முட்டா பயலே… 100 கோடி சொத்து… வீட்டிற்கு ரெய்டு வந்த அதிகாரிகள்… பயத்தில் மொத்த பணத்தையும் எரித்து கழிவறையில் கொட்டிய இன்ஜினியர்…!

By Srimathi on ஆவணி 26, 2025

Spread the love

பீகார் மாநிலத்தில்  ஊடகப் பணிகள் துறையில் வினோத் ராய் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். அந்த மாநிலத்தில் நடைபெறும் பாலங்கள் கட்டும் பணி & சாலை சீரமைக்கும் பணி மேலாண்மையை கவனித்து வந்தார். மேலும் இவர் ஒப்பந்தகாரர்களிடம் இருந்து லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள், இவர் வீட்டில் சோதனை செய்ய முடிவு செய்தனர்.

தன் வீட்டுக்கு ரைடு வரப்போவதை முன்கூட்டியே அறிந்த வினோத்ராய், தனது மனைவி பப்லி ராயுடன் சேர்ந்து ரூபாய் நோட்டுகளை எரித்து, கழிவறையில் ஊற்றியுள்ளார். கழிவறை நீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டதால், மேலும் பணத்தை எரிக்க முடியாமல், திகைத்து நின்ற நேரத்தில் அரசு அதிகாரிகள் வீட்டிற்குள் புகுந்து சோதனை தொடங்கினர். மேலும் கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுகள் கழிவறையில் எரிந்த நிலையில் இருந்ததை கண்ட அதிகாரிகள், பெரும் அதிர்ச்சி  அடைந்தனர்.

   

தொடர்ந்து நடத்திய சோதனையில், 40 லட்ச ரூபாய் ரொக்கமும், பாதி எரிந்த நிலையில் 20 லட்சம் பணமும், 100 கோடி மதிப்புள்ளான சொத்து ஆவணங்களும், விலை மதிப்பு மிக்க கடிகாரங்களும் கண்டெடுக்கப்பட்டன. மேலும் போலீசார், தடவியல் நிபுணர்களின் உதவியுடன் பணம் எரிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.