தினமும் காலை வெறும் வயிற்றில் வெந்நீர் குடுப்பதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா?…. இனி தவறாம இத பண்ணிடுங்க…!

By Srimathi on ஆவணி 26, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் பலரும் காலை எழுந்ததும் டீ, காபி குடிப்பதையே வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் அதில் ஏற்படும் அபாயங்களை, யாரும் அறிவதில்லை. இதற்கு மாறாக காலையில், ஆரோக்கியமான மூலிகை நீர்களை குடிக்கலாம். அப்படி முடியவில்லை என்றாலும், வெந்நீர் குடிப்பதும் பல நன்மைகளை தரும். அதன்படி தினமும் காலை வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

  • வெந்நீர், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.
  • வெந்நீர் செரிமான மண்டலத்தை தூண்டி, குடல் இயக்கத்தை ஊக்குவிக்கிறது.
  • மேலும் உடல் கழிவுகளை எளிதாக வெளியேற்ற உதவுகிறது.
  • செரிமானத்தை அதிகரித்து, உணவுகளை எளிதில் ஜீரணம் அடைய செய்கிறது.
  • மேலும் உடல் எடையை குறைக்க உதவுகிறது.
  • உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, உடலில் உள்ள கலோரிகளை வேகமாக எரிக்க உதவுகிறது.
  • மேலும் வெந்நீர் அதிகமாக குடித்தால், பசி உணர்வை குறைக்கிறது.
  • வெந்நீர் அதிகமாக குடிப்பதினால், கார்ட்டிசோல் என்ற மன அழுத்த ஹார்மோனின் அளவை குறைக்கிறது.
  • வெந்நீர் குடிப்பதன் மூலம், மன அழுத்தம் குறைந்து, தூக்கத்தை மேம்படுத்துகிறது.
  • தொடர்ந்து வெந்நீர் குடித்தால், சரும பிரச்சனைகளும் நீங்கும்.
  • வெந்நீர், தோளில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி, முகப்பரு, சரும அழற்சி போன்ற பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது.
  • வெந்நீர் குடிப்பதன் மூலம், தசை வலி, மூட்டு வலி போன்ற வலிகளில் இருந்து நிவாரணம் பெறலாம்.
  • மேலும் பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் ஏற்படும் வலிகள் கூட, வெந்நீர் குடிப்பதால் குறையும்.

எனவே தினசரி காலையில் வெந்நீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.