பணியின் பெயர்: வழக்கு பணியாளர் (Case Worker).
பணிபுரியும் இடம்: திருத்தணி மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் உள்ள பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம் (One Stop Center).
சம்பளம் & தகுதிகள்: மாத சம்பளம் ₹18,000. விண்ணப்பிக்கும் பெண்கள் 40 வயதிற்கு உட்பட்டவராகவும், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: சட்டப் படிப்பு (Law Degree) அல்லது சமூகப் பணியில் முதுகலைப் பட்டம் (MSW/Sociology/Psychology) முடித்திருக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பான பணிகளில் அனுபவம் இருத்தல் கூடுதல் தகுதியாகும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 2, 2026, மாலை 5:45 மணி வரை
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான Tiruvallur District Website மூலம் விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, உரிய ஆவணங்களுடன் “மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், 2-வது தளம், திருவள்ளூர் – 602001” என்ற முகவரிக்கு அனுப்பலாம்
