மத்திய அரசின் கீழ் செயல்படும் எல்லைப்புற சாலைகள் அமைப்பில் (BRO) காலியாக உள்ள 898 பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்துறையில் டிராஃப்ட்ஸ்மேன், ஹிந்தி டைப்பிஸ்ட் மற்றும் எலக்ட்ரீஷியன் போன்ற பல்வேறு பிரிவுகளில் பணிகள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான கல்வித் தகுதியாக 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு (+2) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு மாதச் சம்பளமாக ₹20,000 வழங்கப்படும். தகுதியான நபர்கள் எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கொடுக்கப்பட்டுள்ள இணையதள லிங்க் வழியாக வரும் ஜூலை 4-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
