வெளிநாட்டு அதிகாரியை வரவேற்பதற்காக தனியார் நிறுவன ஊழியர்கள் நடனமாடிய வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது .அந்த வீடியோவில் ஒரு வெளிநாட்டு அதிகாரியை வரவேற்பதற்காக இந்திய ஊழியர்கள் நடனமாடுகிறார்கள். “கில்லி கில்லி” என்ற தெலுங்கு பாடலுக்கு நடனம் ஆடுகிறார்கள். மேலும் அந்த வீடியோவில் ஒரு சிலர் வெறுங்காலுடன் கூட இருக்கிறார்கள். அந்த ஊழியர் அவர்கள் நடனம் ஆடுவதை உற்சாகப்படுத்துகிறார். மேலும் சிரித்துக் கொண்டே பார்த்துக் கொண்டிருக்கிறார்.
India should stop chaprification of corporate offices
This is so pathetic to see Indian girls dancing in office an d welcoming a foreign client and the becahra client also forced to dance.
Such showcasing will only make other countries feel Indian offices are causal and not… pic.twitter.com/gpA9kXY4GJ
— Woke Eminent (@WokePandemic) July 21, 2025
இந்த வீடியோவை பகிர்ந்த பயனர், “இந்திய பெண்கள் அலுவலகத்தில் நடனமாடி வெளிநாட்டு அதிகாரியை வரவேற்பது மிகவும் பரிதாபமானது. இது போன்ற காட்சிப்படுத்தல்கள் மற்ற நாடுள் இந்திய அலுவலகங்கள் சாதாரணமாக இயங்கும், தீவிரமான வேலைக்கு தகுதியற்றவை என்றும் உணர வைப்பதாக பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பார்வை பெற்று பிறகு பயனர்கள் ஊழியர்களின் நடந்தால் கோபமடைந்துள்ளார்கள் .ஒரு சிலரோ இதில் எந்த தவறும் இல்லை என்று கூறி உள்ளார்கள். ஒரு சிலரோ அவர்கள் கடினமாக உழைக்கிறார்கள் மகிழ்ச்சியாக இருக்கட்டும். தங்கள் நண்பர்களோடு சிறிது நேரம் செலவிடும் என்று ம் பதிவிட்டு வருகிறார்கள்.
