பெங்களூரு, கொட்டிகெரே பகுதியில் உள்ள உணவகத்தில் காசாளராகப் பணியாற்றி வந்த சன்னராயப்பட்டணத்தைச் சேர்ந்த 42 வயதுடைய சந்துரு, கடந்த அக்டோபர் 30 அன்று காலை வழக்கம் போல் உணவு அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டு, மாரடைப்பு காரணமாக மேஜையின் மீது குப்புறச் சரிந்து விழுந்த சம்பவம் அங்கிருந்தவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக அருகில் இருந்த உணவக ஊழியர்கள் முகத்தில் நீர் தெளித்து முதலுதவி அளிக்க முயன்ற போதிலும், அவர் சுயநினைவு பெறவில்லை.
இதனைத் தொடர்ந்து, அவர் உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்; இருப்பினும் மருத்துவர்கள் அவரைச் காப்பாற்ற முயன்ற முயற்சி பலனளிக்காமல் அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். உணவகத்தின் சிசிடிவி கேமராவில் பதிவான இந்தத் துயரச் சம்பவம் குறித்த காட்சிகளின் அடிப்படையில், உள்ளூர் போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
