தொகுதி மறுவரையறை (Delimitation) விவகாரத்தில் தமிழ்நாடு அரசு
எடுத்துள்ள திடீர் நிலைப்பாடு, தவெக அரசுக்கு அரசியல் ரீதியாகப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானத்தின் சாராம்சம், முதலமைச்சர் விஜய்யின் அதிகாரப்பூர்வ உரையில் இடம்பெறாமல் போனதற்கு, அரசின் கொள்கை முடிவுகளைச் சரியாக ஒருங்கிணைக்கத் தவறிய நிர்வாக அதிகாரிகளின் அலட்சியமே முதன்மைக் காரணம் எனக் குற்றம் சாட்டப்படுகிறது.
குறிப்பாக, முதலமைச்சரின் உரையை அரசியல் மற்றும் சட்ட ரீதியாகச் சரிபார்த்துத் தயாரிக்கும் பொறுப்பு தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு இருக்கும்போது, இத்தகைய பாரிய தவறு நிகழ்ந்தது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது. அதேவேளையில், நிர்வாகச் சிக்கல்களை மட்டுமே சாக்காகக் கூறி ஒதுங்கிவிட முடியாது என்றும், மாநிலத்தின் மிக முக்கியமான அரசியல் உரையை நிகழ்த்தும்போது முதலமைச்சரும் கூடுதல் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் செயல்பட்டிருக்க வேண்டாமா என்ற கேள்வியும் அரசியல் களத்தில் வலுப்பெற்று வருகிறது.
மக்களின் அன்றாடப் பயணத்திற்குத் தவிர்க்க முடியாத இடமாக இருக்கும் பெட்ரோல் பங்குகளில், பணத்திற்கு ஏற்ற சரியான அளவு எரிபொருள் ஊற்றப்படுகிறதா…
டேராடூனின் படேல் நகரில் நிகழ்ந்த துணிகரக் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள…
மனைவியைப் பிரிந்து வாழ்ந்துவந்த ஆட்டோ ஓட்டுநரான ரமேஷ், பாபு என்பவரின் மகளோடு நட்பு பாராட்டி வந்துள்ளார். இந்தத் தொடர்பை பாபு…
சம்பல் மாவட்டம் பஹ்ஜோய் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், கூடுதல் வரதட்சணையாக மோட்டார் சைக்கிளும் தங்கச் சங்கிலியும் தராத காரணத்தால் ராதா…
வீட்டில் பரிசோதித்த கர்ப்பப் பரிசோதனை முடிவும் வயிறு பெரிதானதும் ஒரு தாய்க்குத் தன் பதின்ம வயது மகள் மீது தவறான…
மத்தியப் பிரதேசத்தின் ராய்சென் மாவட்டம், தேவரி வட்டாரத்தில் அமைந்துள்ள படாய் கிராமத்து நர்மதை ஆற்றங்கரையில், விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மண்ணைத் தோண்டியபோது…