“மனைவியின் கையில் இருந்த டாட்டூ”… மாமியார் வீட்டில் கணவன் கண்ட ‘அந்த’ காட்சி…. அடுத்து நடந்த கொடூரம்… குடியாத்தத்தில் பகீர் சம்பவம்…!

Spread the love

கணவன்-மனைவி அல்லது காதலர்கள் தங்களின் அன்பை வெளிப்படுத்திக் கொள்ள ஒருவருடைய பெயரை மற்றவர் உடலில் பச்சை குத்திக் கொள்வது (டாட்டூ) பல காலமாக வழக்கத்தில் இருந்து வருகிறது. தற்போது பெயர்களுக்குப் பதிலாக தங்களுக்குப் பிடித்தவர்களின் புகைப்படங்களையே டாட்டூவாக வரைந்து கொள்வது புதிய நாகரிகமாக மாறி வருகிறது. ஆனால், இந்த டாட்டூ மோகம் வேலூர் மாவட்டத்தில் ஒரு குடும்பத்தில் பெரும் வன்முறையாக வெடித்து, கணவனை சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் தள்ளியுள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த எர்த்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் அஜித் (32). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கும், ஆந்திர மாநிலம் பலமநேர் பகுதியைச் சேர்ந்த பராசக்தி (28) என்ற பெண்ணுக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். தனியார் காலணி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த பராசக்தியின் நடத்தையில், கடந்த சில காலமாகவே கணவர் அஜித்துக்கு சந்தேகம் இருந்து வந்துள்ளது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

கணவருடன் ஏற்பட்ட கோபத்தால் சில மாதங்களுக்கு முன்பு பராசக்தி ஆந்திராவில் உள்ள தன் பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். மனைவியை சமாதானம் செய்து மீண்டும் குடும்பம் நடத்த அழைத்து வருவதற்காக அஜித் அண்மையில் தன் மாமியார் வீட்டுக்குச் சென்றுள்ளார். இனிமேல் சண்டையிட மாட்டேன் என்று கூறி பராசக்தியை குடியாத்தத்திற்கு அழைத்து வந்துள்ளார். அப்போதுதான் பராசக்தியின் கையில் வேறு ஒரு ஆணின் உருவப்படம் டாட்டூவாக வரையப்பட்டிருந்ததையும், உடலின் சில இடங்களில் அந்த நபரின் பெயர் பச்சை குத்தப்பட்டிருந்ததையும் அஜித் கவனித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அஜித், பராசக்தியிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார். உறவினர்கள் தடுத்து நிறுத்தியும், மீண்டும் இரவு நேரத்தில் ஏற்பட்ட மோகத்தில் பராசக்தி மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு மயக்கமடைந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையிலும் அனுமதித்தனர். அங்கு பராசக்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து மனைவியை அடியாட்களைப் போல் தாக்கிய ஆட்டோ ஓட்டுநர் அஜித்தைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Nanthini

Recent Posts

அதிமுகவிற்கு அடுத்த அதிரடி ஷாக்..! 3 எம்.எல்.ஏ.க்கள் திடீர் ராஜினாமா… அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுடன் ரகசிய சந்திப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அ.தி.மு.க.வைச் சேர்ந்த மூன்று முக்கிய சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ.க்கள்) தங்களது பதவிகளை…

10 minutes ago

பழிக்கு பழி.. அரசு பள்ளி வாசலில் நடந்த பயங்கரம்… மதுராந்தகத்தில் ஓட ஓட வெட்டப்பட்ட வாலிபர்… பின்னணியில் இருக்கும் பகீர் காரணம்….!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த நேத்தப்பாக்கம் கிராமத்தில் இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட முந்தைய பகை, இன்று ஒரு கொடூரமான…

36 minutes ago

மூக்கில் சிறிய சதை வளர்ச்சி… நள்ளிரவில் நடந்த கொடூரம்! 21 வயது நர்சிங் மாணவிக்கு நேர்ந்த சோகம்… அரசு கொடுத்த இலவச வீடு மற்றும் வேலை… நெகிழ்ந்த சகோதரி….!

திருச்சி அரசு மருத்துவமனையில் மூக்கில் சதை வளர்ச்சிக்கான சிகிச்சையின் போது நர்சிங் மாணவி சீதாலட்சுமி உயிரிழந்த சம்பவம், மருத்துவ வட்டாரத்திலும்…

41 minutes ago

BREAKING: மேலும் சில MLA-க்கள் ராஜினாமா?… திடீர் திருப்பம்…. செம ஷாக்கில் இபிஎஸ்…!

தமிழக அரசியலில் தற்போதைய சூழல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவைச் சேர்ந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் (MLA) தங்கள் பதவிகளை…

46 minutes ago

காதலை மறுத்த இளம்பெண்.. மண்ணெண்ணெய் பாட்டில்களுடன் வந்த 4 பேர்… கோவையில் நூலிழையில் உயிர் தப்பிய குடும்பம்… உச்சக்கட்ட பரபரப்பு…!

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள கலிக்கநாயக்கன்பாளையம், சிபிசி கார்டன் பகுதியில் காதலை மறுத்த இளம்பெண்ணின் வீட்டின் மீது மண்ணெண்ணெய்…

60 minutes ago

“அம்மாதான் என் எல்லாமே”… கலங்கி நின்ற இயக்குனர் சேரன்…. தமிழ் சினிமாவையே சோகத்தில் ஆழ்த்திய மரணம்….!

தமிழ் திரையுலகில் குடும்ப உறவுகளின் உன்னதத்தையும், எமோஷனல் உணர்வுகளையும் தத்ரூபமாகப் படம்பிடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் இயக்குநர்…

1 மணத்தியாலம் ago