காதலை மறுத்த இளம்பெண்.. மண்ணெண்ணெய் பாட்டில்களுடன் வந்த 4 பேர்… கோவையில் நூலிழையில் உயிர் தப்பிய குடும்பம்… உச்சக்கட்ட பரபரப்பு…!

Spread the love

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள கலிக்கநாயக்கன்பாளையம், சிபிசி கார்டன் பகுதியில் காதலை மறுத்த இளம்பெண்ணின் வீட்டின் மீது மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டில்களை வீசி எறிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் தொண்டாமுத்தூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட இளம்பெண் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, சென்னையைச் சேர்ந்த கார்த்திக் (என்கிற) மாரியப்பன் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் கார்த்திக் மீது தமிழ்நாடு முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் 31-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது அந்த இளம்பெண்ணுக்கு தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், கார்த்திக்குடனான காதலை முறித்துக் கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக், தொடர்ந்து அந்தப் பெண்ணை தொந்தரவு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை கார்த்திக் தனது நண்பர்கள் மூன்று பேருடன் கேடிஎம் (KTM) மற்றும் பல்சர் ஆகிய இருசக்கர வாகனங்களில் இளம்பெண்ணின் வீட்டிற்கு வந்துள்ளார். அவர்கள் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் நிரப்பிய பீர் மற்றும் மதுபான பாட்டில்களை வீட்டின் மீது வீசி எறிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், வீட்டின் வெளியில் நின்று கொண்டிருந்த இளம்பெண்ணின் தந்தையும், தாளியூர் பேரூராட்சியில் பிட்டராக பணிபுரிந்து வருபவருமான சுந்தரமூர்த்தியை தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

அவர்கள் வீசிய பாட்டில்களில் ஒன்று வெடித்து, வீட்டின் போர்டிகோ பகுதியில் இருந்த செருப்பு ஸ்டாண்ட் மீது விழுந்து தீப்பற்றி எரிந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை. இது குறித்து சுந்தரமூர்த்தி அளித்த புகாரின் பேரில், கார்த்திக் உள்ளிட்ட 4 பேர் மீது தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்து, தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Nanthini

Recent Posts

அதிமுகவிற்கு அடுத்த அதிரடி ஷாக்..! 3 எம்.எல்.ஏ.க்கள் திடீர் ராஜினாமா… அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுடன் ரகசிய சந்திப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அ.தி.மு.க.வைச் சேர்ந்த மூன்று முக்கிய சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ.க்கள்) தங்களது பதவிகளை…

10 minutes ago

பழிக்கு பழி.. அரசு பள்ளி வாசலில் நடந்த பயங்கரம்… மதுராந்தகத்தில் ஓட ஓட வெட்டப்பட்ட வாலிபர்… பின்னணியில் இருக்கும் பகீர் காரணம்….!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த நேத்தப்பாக்கம் கிராமத்தில் இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட முந்தைய பகை, இன்று ஒரு கொடூரமான…

35 minutes ago

மூக்கில் சிறிய சதை வளர்ச்சி… நள்ளிரவில் நடந்த கொடூரம்! 21 வயது நர்சிங் மாணவிக்கு நேர்ந்த சோகம்… அரசு கொடுத்த இலவச வீடு மற்றும் வேலை… நெகிழ்ந்த சகோதரி….!

திருச்சி அரசு மருத்துவமனையில் மூக்கில் சதை வளர்ச்சிக்கான சிகிச்சையின் போது நர்சிங் மாணவி சீதாலட்சுமி உயிரிழந்த சம்பவம், மருத்துவ வட்டாரத்திலும்…

40 minutes ago

BREAKING: மேலும் சில MLA-க்கள் ராஜினாமா?… திடீர் திருப்பம்…. செம ஷாக்கில் இபிஎஸ்…!

தமிழக அரசியலில் தற்போதைய சூழல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவைச் சேர்ந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் (MLA) தங்கள் பதவிகளை…

45 minutes ago

“அம்மாதான் என் எல்லாமே”… கலங்கி நின்ற இயக்குனர் சேரன்…. தமிழ் சினிமாவையே சோகத்தில் ஆழ்த்திய மரணம்….!

தமிழ் திரையுலகில் குடும்ப உறவுகளின் உன்னதத்தையும், எமோஷனல் உணர்வுகளையும் தத்ரூபமாகப் படம்பிடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் இயக்குநர்…

1 மணத்தியாலம் ago

“ஒரே நாளில் சரிந்த வேலுமணி கோட்டை”… எடப்பாடி வீட்டில் நடந்த அந்த ரகசிய சந்திப்பு.. அதிர்ச்சியில் அதிமுக… கலகலக்கும் கொங்கு மண்டலம்….!

அதிமுகவின் உட்கட்சி அரசியல் களம் தற்போது அதிரடி திருப்பங்களுடன் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. எடப்பாடி பழனிசாமி (EPS) மற்றும் எஸ்பி…

1 மணத்தியாலம் ago