ஜார்கண்ட் மாநிலத்தில் ரயில் தண்டவாளத்தில் யானை ஒன்று குட்டியை பிரசவித்த சம்பவம் நடந்துள்ளது. ஜார்கண்டில் ஒரு கர்ப்பிணி யானை தண்டவாளம் அருகே வந்து பிரசவ வேதனையில் நின்று கொண்டிருந்தது. அதே சமயத்தில் ரயில் அருகில் வருவதை கவனித்த உள்ளூர் வாசிகள் உடனடியாக உஷாராகி ரயிலை நிறுத்தினர்.
லோகோ பைலட் உடனே ரயிலை நிறுத்தினார். பிறகு யானை ஒரு குழந்தையை பெற்றெடுத்தது. பிறகு அது மெதுவாக தன் குழந்தையுடன் காட்டுக்குள் நடந்து சென்றது. தாயும் குழந்தையும் பாதுகாப்பாக அங்கிருந்து செல்லும் வரை ரயில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் அங்கேயே நின்றது. இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பலருடைய பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
Beyond the news of human-animal conflicts, happy to share this example of human-animal harmonious existence.
A train in Jharkhand waited for two hours as an elephant delivered her calf. The 📹 shows how the two later walked on happily.
Following a whole-of government approach,… pic.twitter.com/BloyChwHq0
— Bhupender Yadav (@byadavbjp) July 9, 2025
