கோயம்புத்தூர் மாவட்டம் உமாண்டி முடக்கு ஐந்தாவது டிவிஷன் மக்கள் குடியிருப்பு பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி சுகன்யா. இந்த தம்பதியினருக்கு இரண்டரை வயதுடைய ஹேமா ஸ்ரீ என்ற குழந்தை இருந்தது. நேற்று இரவு 2 1/2 மணிக்கு ஊருக்குள் நுழைந்த காட்டு யானைகள் மாரியப்பனின் வீட்டு ஜன்னலை உடைத்தது. பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை இழுத்து தாக்கியது.
குழந்தையை காப்பாற்ற முயன்ற 51 வயது பாட்டியையும் யானை தள்ளி விட்டது. இதுகுறித்த அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டு யானைகளை விரட்டி அடித்தனர். அதற்குள் பாட்டியும் பேத்தியும் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பெய்த பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
