நடந்து முடிந்த தேர்தலில் இந்தியத் தேர்தல் ஆணையம் நிர்ணயித்த ரூ.40 லட்சம் செலவின வரம்பிற்குள் வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவுக் கணக்குகளைச் சமர்ப்பித்துள்ளனர். இதன்படி, பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட தவெக தலைவர் CM விஜய் ரூ.22.05 லட்சமும், எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுகவின் இபிஎஸ் ரூ.22.67 லட்சமும் செலவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும், தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட பாமகவின் செளமியா அன்புமணி ரூ.24 லட்சமும், தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுகவின் SP வேலுமணி ரூ.23.56 லட்சமும், சேப்பாக்கம் தொகுதியில் திமுகவின் உதயநிதி ஸ்டாலின் ரூ.9.37 லட்சமும் தேர்தல் பிரச்சாரத்திற்காகச் செலவிடப்பட்டதாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
