விமான நிலையத்தில் இறங்கியதும் உச்சகட்ட பதற்றம்…. அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து… மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனிதா ராதாகிருஷ்ணன்…!

By Nanthini on ஆவணி 9, 2026

Spread the love

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் சூழலில், சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்களை முன்னிட்டு திமுக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் தனது சொந்தத் தொகுதியான திருச்செந்தூருக்கு வருகை தந்தார். நேற்று மதியம் தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்த அவர், மாலையில் சேர்ந்தபூமங்கலம் பகுதியில் நடைபெறவிருந்த கட்சி முகவர்கள் கூட்டத்தில் பங்கேற்பதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும், விமான நிலையத்தை வந்தடைந்தபோதே அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், திட்டமிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் உடனடியாக ரத்து செய்யப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, அவர் திருச்செந்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதைக் கண்டறிந்து, இரவில் தங்கி சிகிச்சை பெறவும், காலையில் மேல் பரிசோதனைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினர். தற்போது மருத்துவமனையில் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் வேளையில், முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி திமுக தொண்டர்களையும்கட்சியினரையும் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும் ஆழ்த்தியுள்ளது.