கொளத்தூர் தேர்தல் வழக்கு…. ஸ்டாலினுக்கு பேரதிர்ச்சி… ஹைகோர்ட் அளித்த அதிரடி தீர்ப்பு….!

By Nanthini on புரட்டாதி 5, 2026

Spread the love

கொளத்தூர் தொகுதியின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பான திமுகவின் இரு மனுக்களையும் சென்னை உயர்நீதிமன்றம் அடுத்தடுத்து தள்ளுபடி செய்துள்ளது. மு.க.ஸ்டாலினுக்கு சட்டரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. ஏற்கனவே தேர்தல் ஆணையத்தின் 2024 நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை எதிர்த்த மனுவை நீதிமன்றத்தின் அறிவுறுத்தலால் திமுக திரும்பப் பெற்ற நிலையில், தற்போது தவெக வேட்பாளரின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரிய இரண்டாவது மனுவும் தள்ளுபடியாகியுள்ளது.

இந்தச் சூழலில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ஸ்டாலின் தரப்பு முயன்றாலும், தேர்தல் ஆணையத்தின் விதிகள் மற்றும் உயர்நீதிமன்றத்தின் தெளிவான தீர்ப்புகளைத் தாண்டி, வலுவான புதிய ஆதாரங்கள் இன்றி உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கிற்கு சாதகமான முடிவைப் பெறுவதும், வெற்றியைத் தலைகீழாக மாற்றுவதும் மிகவும் கடினமான ஒன்றாகும்.