ஜெர்மனியைச் சேர்ந்த அலெக்சாண்ட்ரா ஹில்ட்பிராண்ட் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தன்னுடைய பத்தாவது குழந்தை பெற்றெடுத்துள்ளார். மனித உரிமை ஆர்வலரான இவர் இது குறித்து பேசுகையில், “நான் மிகவும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுகிறேன். தினமும் ஒரு மணி நேரம் தவறாமல் நீச்சல் அடிப்பேன், 2 மணி நேரம் நடப்பேன் என்று கூறியுள்ளார். மேலும் தான் எப்போதும் கருத்தடை சாதனைகள் பயன்படுத்தவில்லை.
புகை பிடிப்பதோ மது அருந்துவதோ கிடையாது என்று கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து இந்திய மகப்பேறு மருத்துவர் டாக்டர் கானா ஸ்ரீனிவாஸ் கூறுகையில், “உடல் தகுதியும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் மக்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு காரணமாக இருந்தாலும் கர்ப்ப காலத்தில் வயது ஒரு முக்கிய காரணியாக உள்ளது. 60களில் இயற்கை கருத்தரிப்பது மிகவும் அரிது. அப்படி கரு உருவானாலும் அந்த கர்ப்பம் அதிக ஆபத்துடையதாக கருதப்படும். கர்ப்ப கால நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் ஆகிய ஆபத்தை அதிகரிக்கின்றன.
