சென்னையில் அதிர்ச்சி… 100 ரூபாயைக் காட்டி பிஞ்சு குழந்தைகளிடம் காம முகத்தை காட்டிய 73 வயது முதியவர்…. தையல் கடைக்குச் சென்ற சிறுமிகளுக்கு நேர்ந்த கொடுமை…..!

Spread the love

சென்னை கொடுங்கையூரில் துணி தைக்கச் சென்ற சிறுமிகளிடம் முதியவர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த 27 வயது தாய், தனது 4-ம் வகுப்பு மற்றும் 2-ம் வகுப்பு படிக்கும் இரு பெண் குழந்தைகளை வீட்டின் அருகே உள்ள ஒரு தையல் கடைக்கு துணி தைப்பதற்காக அனுப்பி வைத்துள்ளார். அந்தத் தருணத்தைப் பயன்படுத்திக் கொண்ட கடைக்காரர், குழந்தைகளிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார்.

கடையிலிருந்த 73 வயது முதியவரான பன்னீர்செல்வம், குழந்தைகளுக்கு அளவு எடுப்பதாகக் கூறி அவர்களிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார். மேலும், அவர்களிடம் 100 ரூபாயைக் கொடுத்து பள்ளியில் ஐஸ்கிரீம் வாங்கிக் கொள்ளுமாறும், நடந்த விஷயத்தை யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் மிரட்டியுள்ளார். இதனை அங்கிருந்த அக்கம்பக்கத்தினர் கவனித்து, குழந்தைகளை வீட்டிற்கு அனுப்பி வைத்ததுடன், நடந்தவற்றை அவர்களின் தாயிடமும் தெரிவித்துள்ளனர்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த குழந்தைகளின் தாய், உடனடியாகக் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட பன்னீர்செல்வம் கொருக்குப்பேட்டை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், தனது தம்பிக்கு உடல்நிலை சரியில்லாததால் தற்காலிகமாக அந்தத் தையல் கடையை அவர் கவனித்து வந்ததும் தெரியவந்தது. கடந்த 20 ஆண்டுகளாகவே இவர் தனது மனைவி மற்றும் மகளைப் பிரிந்து வாழ்ந்து வருவதும் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்தது.

இதனையடுத்து, எம்.கே.பி நகர் அனைத்து மகளிர் காவல் துறையினர் பன்னீர்செல்வம் மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குழந்தைகளை நம்பி கடைக்கு அனுப்பிய தாய்க்கு நேர்ந்த இந்தத் துயரச் சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் கவலையையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“103 காலங்கள்… ஒரு சகாப்தம் முடிவு”… தமிழகத்தில் தாமரை மலர வித்திட்ட பிரபலம் மறைவு…!

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த முன்னோடிகளில் ஒருவரும், அக்கட்சியின் தொடக்ககாலத் தூண்களுமான திருக்கோவிலூர் சுந்தரம் அவர்கள் தனது 103-வது…

30 seconds ago

“தமிழகமே அதிருது.. 2026 தேர்தல் சர்வே”… மீண்டும் அரியணையில் அமரும் திமுக.. விஜய்க்கு சான்ஸே இல்ல… 6 முக்கிய நிறுவனங்களின் கணிப்புகள் வெளியீடு…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், மாநிலத்தின் அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத…

6 minutes ago

“வாக்கு கேட்கச் சென்ற இடத்தில் வாக் அவுட்?… திமுக வேட்பாளரை திணறடித்த கிராம மக்கள்… பூம்புகாரில் தேர்தல் களம் திடீர் சூடு”…!!!

மயிலாடுதுறை மாவட்டத்தின் பூம்புகார் சட்டமன்றத் தொகுதி தற்போது தமிழகத் தேர்தலின் மிக முக்கியமான போர்க்களமாக மாறியுள்ளது. தமிழகத்தின் இரு பெரும்…

10 minutes ago

30 பந்துகளில் 34 ரன்கள்… சென்னை அணியை கவிழ்த்த மேத்யூ ஷார்ட்… கையில் இருந்த வெற்றியை ஐதராபாத்திடம் தாரைவார்த்தது எப்படி..?

ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியுள்ளது. முதலில் பேட்டிங்…

10 minutes ago

கடலில் நடந்த கோரச் சம்பவம்…. 14 இந்தியக் கப்பல்களை வழிமறித்த ஈரான் கடற்படை…ஹார்முஸ் ஜலசந்தியில் பற்றி எரியும் பதற்றம்…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு அதிகரித்து வரும் சூழலில், உலக வர்த்தகத்தின் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியில்…

14 minutes ago

எடப்பாடி தொகுதியில் நடந்த நள்ளிரவு திருப்பம்… விஜய்யின் தவெக எடுக்கப்போகும் புது அவதாரம்… கடைசி நிமிட டிவிஸ்ட்….!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் முனைப்பில் களம் கண்டுள்ள விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்…

17 minutes ago