திக் திக் நிமிடங்கள்…! மின்னல் வேகத்தில் வந்த கார்… தூக்கி வீசப்பட்டு பலியான முதியவர்…. வைரலாகும் பதைப்பதைக்கும் வீடியோ…!!

By Devi Ramu on ஐப்பசி 22, 2026

Spread the love

கேரள மாநிலம் விதுரா – பொன்முடி நெடுஞ்சாலையில் சென்னன்பாறை பகுதி அருகே சாலையோரமாக நடந்து சென்ற 72 வயது முதியவர் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். சாருபாறையைச் சேர்ந்த வேனு நாயுடு என்ற முதியவர் மாலையில் சாலையைக் கடந்துவிட்டு சாலையின் இடதுபுறமாக நடந்து சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் அதிவேகமாக வந்த கார் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் தப்பியோடியது.

https://twitter.com/PTI_News/status/2112983327871541347?s=20

   

இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்து நடந்த விதம் குறித்து நெட்டிசன்கள் பலரும் இது சாதாரண விபத்தா அல்லது திட்டமிட்ட தாக்குதலா எனத் தீவிர விவாதங்களை எழுப்பி வருவதுடன், தப்பியோடிய கார் ஓட்டுநரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.