இதுவரை கால்நடைகளிடம் மட்டுமே பரவி வந்த ‘ஷமோண்டா’ என்ற அபாயகரமான வைரஸ் தொற்றுக்குள்ளாகி, பிரான்ஸ் நாட்டில் உலகிலேயே முதன்முறையாக மனிதர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தீவிர நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்த அந்த நோயாளி, அக்டோபர் தொடக்கத்தில் உயிரிழந்த நிலையில், அவருக்கு ஷமோண்டா வைரஸ் தொற்று இருந்தது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரான்ஸின் கிழக்குப் பகுதியில் ‘கியூலிகாய்டீஸ் மிட்ஜ்’ எனப்படும் சிறிய வகை பூச்சி கடித்ததன் மூலமே இந்த வைரஸ் அவருக்குப் பரவியிருக்கலாம் எனக் சந்தேகிக்கப்படுகிறது. இந்த வைரஸுக்கு வணிகரீதியான தடுப்பூசிகள் ஏதும் இல்லாத நிலையில், பொதுமக்களுக்கு உடனடி ஆபத்து எதுவும் இல்லை எனப் பிரான்ஸ் சுகாதாரத் துறைத் தெரிவித்துள்ளது. இருப்பினும், கால்நடை வைரஸ் மனிதருக்குப் பரவி உயிரிழப்பை ஏற்படுத்தியிருப்பது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
