“தாத்தா வயதில் காமவெறி!… 4 வயது குழந்தையை கல்லால் தாக்கி வன்கொடுமை செய்த முதியவர்… புனேவை உலுக்கிய கொடூரச் சம்பவம்”…!!!

By Muthu Mani on வைகாசி 3, 2026

Spread the love

புனேவின் போர் தாலுகா பகுதியில் 4 வயது சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடூரமான குற்றச் செயல் ஒட்டுமொத்த சமூகத்தையும் உலுக்கியுள்ளது. நஸ்ராபூர் பகுதியில் காணாமல் போன அந்தச் சிறுமி, 65 வயது முதியவர் ஒருவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கல்லால் நசுக்கிக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அந்த முதியவரைப் பிடித்த காவல்துறை, அவர் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்தக் கொடூரச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், புனே-பெங்களூரு நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டு உடனடி நீதி கோரிப் போராட்டத்தில் குதித்தனர். சிறுமியின் உடல் காவல் நிலையம் கொண்டுவரப்பட்டபோது, உயிரிழந்த குழந்தையின் குடும்பத்தினர் மற்றும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் திரண்டு குற்றவாளிக்குக் கடும் தண்டனை வழங்கக் கோரி முழக்கமிட்டனர். விரைவு நீதிமன்றங்கள் மூலம் வழங்கப்படும் நீதி தாமதமாவது, இத்தகைய குற்றங்கள் மீண்டும் மீண்டும் நிகழக் காரணமாக அமைவதாகச் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

   

மக்களின் போராட்டத்தை அடுத்து, புனே ஊரக காவல் கண்காணிப்பாளர் சந்தீப் சிங் கில், 15 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இந்த வழக்கு விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என்று உறுதியளித்தார். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் இத்தகைய வன்கொடுமைகள் பெரும் பாதுகாப்பின்மையை ஏற்படுத்தியுள்ளன. இதேபோல் கிரேட்டர் நொய்டாவிலும் ஒரு வளர்ப்புத் தந்தை தனது மகளைக் கொலை செய்த சம்பவம் சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.