மகாராஷ்டிர மாநிலம் பிம்பிரி சிஞ்ச்வாட் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களின் 10 மற்றும் 4 வயதுடைய இரண்டு சிறுமிகளுக்கு, பக்கத்து வீட்டில் வசித்து வந்த 65 வயதான ரம்ஜான் பாகவான் என்ற முதியவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பெற்றோர் வேலைக்குச் சென்ற நேரத்தில் இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட அவர், இது குறித்து வெளியே சொன்னால் கத்தியால் வயிற்றைக் கிழித்து விடுவேன் எனச் சிறுமிகளுக்குக் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதனால் பயந்துபோன சிறுமிகள் நீண்ட நாட்களாக இக்கடுந்துயரத்தை வெளியே சொல்லாமல் மறைத்து வந்துள்ளனர்.
இந்நிலையில், மூத்த சிறுமி சந்தேகத்திற்கு இடமான வகையில் முதியவரின் வீட்டிற்குச் செல்வதைக் கவனித்த அண்டை வீட்டுப் பெண், சிறுமியின் பெற்றோரிடம் விவரித்துள்ளார். அதன்பின் பெற்றோர் நடத்திய விசாரணையில், முதியவர் கடந்த மே மாதம் முதல் பலமுறை தங்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம் வெளிச்சத்திற்கு வந்தது. உடனடியாகப் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், ரம்ஜான் பாகவானைக் கைது செய்த காவல்துறையினர் போக்சோ உள்ளிட்ட கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
