அடேய்… என் பொண்டாட்டியை தொட்டவனை சும்மா விடமாட்டேன்…. நீதிமன்றத்தில் மிஸ்ஸான ஸ்கெட்ச்… சாலையில் துரத்தித் துரத்தி வெட்டு… பெண் கொலை வழக்கில்… அடுத்தடுத்த பகீர் திருப்புமுனை…!

By Swetha on ஆடி 29, 2026

Spread the love

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த மகேஸ்வரி என்பவரை, கடந்த 2025 நவம்பரில் அவரது ஆக்ட்டிங் ஓட்டுநரான சசிகுமார் என்பவர் காருக்குள் கொடூரமாகக் கொலை செய்தார். மகேஸ்வரியிடம் வாங்கிய பணத்தைத் திரும்பக் கேட்கும்போது நிலம் வாங்கித் தருவதாக ஏமாற்றி அழைத்துச் சென்று, அவரைத் தாக்கியும் காரின் கதவுகளால் நசுக்கியும் கொன்று 20 பவுன் நகையைக் கொள்ளையடித்துச் சென்றார். இந்த வழக்கில் சசிகுமாரைக் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சமீபத்தில் சசிகுமார் ஜாமினில் வெளியே வந்த நிலையில், தனது மனைவியைக் கொன்றவனைப் பழிவாங்க மகேஸ்வரியின் கணவர் பாண்டிகுமார் தீர்மானித்தார். இதற்காக பிரபல ரவுடி அரவிந்த் தலைமையிலான கூலிப்படையை ரூ.15 லட்சத்திற்குப் பேசி, முன்பணமாக ரூ.8.50 லட்சம் கொடுத்துள்ளார். சிவகங்கை நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டுத் திரும்பிய சசிகுமாரை, கூலிப்படையினர் காரால் மோதி அரிவாளுடன் விரட்டிச் சென்று கொலை செய்ய முயன்றனர். ஆனால், சசிகுமார் தப்பித்து காவல்துறைக்குத் தகவல் அளித்தார்.

   

தகவலறிந்து விசாரணையில் இறங்கிய நாச்சியாபுரம் காவல்துறையினர் மற்றும் தனிப்படையினர், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து ஆட்டோ ஓட்டுநர் குட்லக் தனசேகரன் மற்றும் அபிராகுல் ஆகியோரைக் கைது செய்தனர். அத்துடன் கொலைச் சதிக்கு மூளையாகச் செயல்பட்ட பாண்டிகுமாரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், தப்பி ஓடிய கூலிப்படைத் தலைவன் அரவிந்த் உள்ளிட்ட மற்ற நபர்களைத் தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.