மக்களே..! இதை செய்யாவிட்டால் கேஸ் சிலிண்டர் கிடைக்காது… மத்திய அரசின் புதிய உத்தரவு,,!!

By Soundarya on பங்குனி 16, 2026

Spread the love

சமையல் எரிவாயு (LPG) இணைப்பு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் அனைவரும் வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் தங்களின் இ-கேஒய்சி (eKYC) விபரங்களைப் புதுப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட இந்த காலக்கெடுவிற்குள் இ-கேஒய்சி அப்டேட் செய்யாதவர்களுக்கு சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்படவோ அல்லது மானியம் துண்டிக்கப்படவோ வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த இ-கேஒய்சி பணிகளை மேற்கொள்ள, வாடிக்கையாளர்கள் முதலில் தங்களின் கைபேசியில் Aadhar FaceRD என்ற செயலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர், தாங்கள் எந்த நிறுவனத்தின் எரிவாயு இணைப்பைப் (Indane, HP, Bharat Gas) பயன்படுத்துகிறார்களோ, அந்த நிறுவனத்தின் பிரத்யேகச் செயலியைப் பயன்படுத்தி, முக அடையாள அங்கீகாரம் (Face Authentication) மூலம் ஆன்லைனிலேயே எளிதாகப் பணிகளை முடித்துக் கொள்ளலாம்.

   

நேரடியாகச் சென்று புதுப்பிக்க விரும்புவோர், தங்களின் ஆதார் அட்டை மற்றும் கேஸ் இணைப்புப் புத்தகத்துடன் சம்பந்தப்பட்ட கேஸ் ஏஜென்சி அலுவலகத்திற்குச் சென்று கைரேகை பதிவு மூலமாகவும் இ-கேஒய்சி செய்து கொள்ளலாம். தகுதியற்ற இணைப்புகளை நீக்கவும், முறைகேடுகளைத் தவிர்க்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.