சின்னத்திரை சீரியல்கள் மக்கள் மத்தியில் ஒரு மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. அந்த வகையில் விஜய் டிவி. சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று தான் ‘ஈரமான ரோஜாவே சீசன் 2’. இந்த சீரியல் ஒளிபரப்பாகி சிறிது காலத்திலேயே மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த சீரியலுக்கு என தனக்கான ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்த சீரியலில் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் திரவியமும், காவியா என்ற கதாபாத்திரத்தில் கேப்ரில்லாவும், பார்த்திபன் கதாபாத்திரத்தில் சித்தார்த்தும்,பிரியா கதாபாத்திரத்திலும் சுவாதியும் நடித்து வருகின்றனர். இவர்கள் நால்வரும் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.இதில் பல முன்னணி நட்சத்திரங்களும் நடித்து வருகின்றனர்.
இந்த சீரியல் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி இறுதி கட்டத்தையும் எட்டியுள்ளது. தற்பொழுது இந்த நாடகத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த அனைத்து பிரச்சனைகளும் முடிவடைந்துள்ளது. இந்த சீரியலில் யாருக்கும் தான் காதலித்தவர்களோடு திருமணம் நடைபெறவில்லை. 2022ல் தொடங்கப்பட்ட இந்த சீரியல் இந்த வாரத்துடன் நிறைவடைய உள்ளது.
இதனை விஜய் டிவியும் ப்ரோமோ வீடியோ வெளியிட்டு உறுதி செய்துள்ளது. ஒருவழியாக இரு ஜோடிகளுக்கு இடையே இருந்த அனைத்து பிரச்சனைகளும் முடிந்து, இந்த சீரியல் இரண்டு திருமணங்களுடன் நிறைவடைந்துள்ளது. இதோ அந்த ப்ரோமோ வீடியோ…