‘ஜன நாயகன்’ படக் காட்சிகள் இணையத்தில் கசிந்த விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட எடிட்டர் பிரசாத், தற்போது காவல்துறையிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். கோடீஸ்வரராக வேண்டும் என்ற ஆசையில், தனது சகோதரியின் நண்பர் கொடுத்த பெரும் பண ஆசைக்காகப் படக் காட்சிகளைத் திருடி சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்தத் திருட்டுச் சம்பவத்தில் பிரசாத்துடன் சேர்ந்து செயல்பட்ட நண்பர்கள் யார் மற்றும் இதற்குப் பின்னணியில் இருந்து இயக்கிய மூளையாகச் செயல்பட்ட நபர் யார் என்பது குறித்துப் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ஜன நாயகன்’ படத்தின் காட்சிகள் லீக் ஆன சம்பவம் ரசிகர்கள் மற்றும் படக்குழுவினர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
