BIG BREAKING: “OPS-ஐ சேர்க்க வாய்ப்பே இல்லை” எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்…!!

By Soundarya on தை 29, 2026

Spread the love

அதிமுகவில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் இணைப்பது குறித்த பேச்சுக்கே இடமில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். சேலத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஓபிஎஸ்-ன் “அண்ணன் எடப்பாடி ரெடியா?” என்ற அழைப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பதிலளித்தார். ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது தனது தனிப்பட்ட முடிவல்ல என்றும், கட்சியின் உச்சபட்ச அதிகார அமைப்பான பொதுக்குழுவில் 2,500-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ஒருமனதாக எடுத்த முடிவு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பொதுக்குழுவின் முடிவே இறுதியானது என்பதால், ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பதற்கான வாய்ப்புகள் துளியும் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். அதிமுக பொதுக்குழுவின் இந்தத் தீர்மானத்தைச் சட்டரீதியாகவும் தேர்தல் ஆணையமும் ஏற்கனவே அங்கீகரித்துள்ள நிலையில், ஓபிஎஸ்-ன் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அதிமுகவை ஒன்றிணைக்கப் போவதாகக் கூறி வந்த ஓபிஎஸ்-ன் முயற்சிகளுக்கு எடப்பாடி தரப்பு ஒரு பெரிய முற்றுப்புள்ளியை வைத்துள்ளது.