தமிழ்நாட்டிற்கு கிடைத்துள்ள முதலமைச்சர் எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு அவர் வெளியிட்டுள்ள போட்டோ சூட் வீடியோவே சாட்சி என்று எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டுக்கு கிடைத்திருக்கும் முதலமைச்சர் எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர் வெளியிட்டுள்ள போட்டோ சூட் வீடியோ தான் சாட்சி. நேற்று நான் கரூர் சேற்று உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி சிகிச்சை பெறுபவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து செய்தியாளர்களை சந்தித்தபோது, எந்தவித அரசியலுக்கும் விடவில்லாமல் மக்களின் உணர்வாக என்னுடைய கருத்துக்களை தெரிவித்தேன்.
உங்கள் கட்சிக்காரர்கள், தமிழ்நாடு மாணவர் சங்கம் என்ற பெயரில் போஸ்டர் ஒட்டிக்கொண்டே இருக்கிறார்கள் அந்த அவதூறை கூறுகிறீர்களா? உங்களுடைய அரசியல் காவல்துறை பிரச்சாரம் செய்ய ஒதுக்கிய இடத்தில் உள்ள குளறுபடிகள், திமுகவின் வழக்கமான ஆம்புலன்ஸ் அரசியல், தடியடி நடந்த காட்சிகள் வெளிவந்து அதைப்பற்றி பொதுமக்கள் பேசுவது -இவை எல்லாம் வதந்தி என்று சொல்கிறீர்களா?. பொறுப்போடு நடந்து கொள்வது என்றால்? உங்கள் அமைச்சர் ஒருவர் அழுவது போல நடிக்க தெரியாமல் மாட்டிக் கொண்டாரே அதுவா?.
அல்லது உங்கள் மகனும் துணை முதல்வருமான உதயநிதி கரூர் வந்து சம்பிரதாயத்திற்கு போட்டோ சூட் எடுத்த கையோடு துபாய்க்கு வெக்கேஷன் பறந்து சென்று விட்டாரே அதுவா?. கள்ளக்குறிச்சியில் உங்கள் ஆட்சியில் அலட்சியத்தால் ஏற்பட்ட கள்ளச்சாராய மரணங்களுக்கு கலங்காத இதயம், கலங்காத கண்கள் இப்போது மட்டும் கலங்குகிறதா என்று சரமாரியான கேள்விகளை எழுப்பி திமுக அரசை இபிஎஸ் கடுமையாக வஞ்சித்துள்ளார்.
