தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் கரூரில் மக்களை சந்தித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஜனாதிபதி முதல் உள்துறை அமைச்சர் வரை அரசியல் தலைவர்கள் அனைவரும் வேதனையோடு அறிக்கை வெளியிட்டனர். டெல்லி உள்துறை அமைச்சகத்தில் இருந்து தமிழக அரசின் தலைமைச் செயலாளரை தொடர்பு கொண்டு பேசிய நிலவரத்தை கேட்டறிந்து வருகிறார்கள்.
இந்த விவகாரத்தை டெல்லி தலைமை சென்சிடிவான விஷயமாக பார்க்க ஆரம்பித்துள்ளது. இந்த சம்பவத்தில் திமுக அரசியல் பங்கு என்ன, அவர்கள் இதனை எளிதாக கையாண்டவர்களா என்பதை உன்னிப்பாக உற்று நோக்க பாஜக டெல்லி தலைமை ஆரம்பித்துள்ளது. கரூரில் நடைபெற்ற கூட்டத்திற்கு போதுமான அளவு பாதுகாப்புகளை திமுக அரசு கொடுக்கவில்லை, கேட்ட இடத்தை ஒதுக்கவில்லை, பல கெடுபிடிகளை விதித்தனர்.
விஜய் கூட்டம் நடந்தபோது மின்சாரம் தடைப்பட்டது. ஜெனரேட்டரை ஆன் செய்ய முயன்ற போது அதன் கனெக்சன் வயரையும் கட் செய்து விட்டனர். அதேசமயம் காவல்துறையினர் தடியடி நடத்த ஒட்டுமொத்த கூட்டமும் சிதறி ஓடி இவ்வளவு பெரிய துயரம் நடந்து விட்டது. இது திமுகவின் சதி திட்டம் என தமிழக வெற்றிக்கழகம் தரப்பில், பாஜக கூறும் கருத்துக்களை பாஜக தலைமை உடும்பு பிடியாக எடுத்துக்கொண்டு அந்தக் கோணத்தில் இந்த பிரச்சினையை பார்த்து வருகிறது.
இந்நிலையில் பாஜக தலைமை விஜயை சந்திக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் சொல்லப்படுகிறது. அதே சமயம் கரூருக்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்க விரைவில் அறிக்கை சமர்ப்பிக்க பாஜக எட்டு பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. இந்த சம்பவத்திற்கு வழிவகுத்த சூழ்நிலைகளை ஆராயவும் இந்த துயரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து விரைவில் தனது அறிக்கையை சமர்ப்பிக்கவும் பாஜக சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
