அமைச்சர் வீட்டில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்… திமுகவுக்கு புதிய நெருக்கடி.. கடும் அப்செட்டில் ஸ்டாலின்..!

By Nanthini on ஆவணி 17, 2025

Spread the love

திமுக அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக ED தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சொத்து ஆவணங்கள், முதலீடு விவரங்கள், செல்போன் தகவல்கள், நிறுவனத்தின் வங்கி கணக்கு விபரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான சம்மன் அனுப்பி அமைச்சர் ஐ. பெரியசாமியை விசாரணைக்கு அழைக்கவும் ED அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். தேர்தல் நெருங்கும் நிலையில் இது அவருக்கு பயங்கர நெருக்கடியாக மாறியுள்ளது. இவரை தவிர திமுக அமைச்சர்கள் ஒரு சிலர் இந்த விசாரணையில் சிக்கக்கூடும் என தெரிகிறது.