“புதிய கோல்ட் ஸ்கீம் 2.0….” நடுத்தர மக்களுக்கு லாபமா…. இல்லை பெருத்த நஷ்டமா…. ஆனந்த் சீனிவாசன் எச்சரிக்கை….!

Spread the love

மத்திய அரசு கொண்டு வரவிருக்கும் ‘புதிய தங்க நகை சேமிப்புத் திட்டம் 2.0’ குறித்து பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். வட்டிக்கு ஆசைப்பட்டு மக்கள் தங்களின் அசல் தங்கத்தையே இழக்கும் அபாயம் உள்ளதால், கடந்த 2015-ம் ஆண்டைப் போலவே இந்த முறையும் இத்திட்டம் தோல்வியில்தான் முடியும் என்று அவர் கணித்துள்ளார். நடப்பு ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் நகைக்கடை வியாபாரிகளை இடைத்தரகர்களாக இணைத்து இத்திட்டத்தை எப்படியாவது செயல்படுத்த அரசு முயன்று வரும் நிலையில், இதனால் நடுத்தர மக்களுக்குத்தான் பெரும் நஷ்டம் ஏற்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இத்திட்டத்தின் கீழ் மக்கள் தங்களிடம் உள்ள நகைகளைக் கொண்டு போய் கொடுத்தால், வங்கிகள் அதை அப்படியே ஏற்றுக்கொள்ளாது. மாறாக, அந்த நகைகளை உருக்கி பிஸ்கட்டாகவோ அல்லது நாணயமாகவோதான் கணக்கில் எடுத்துக் கொள்ளும். பொதுவாக நடுத்தர மக்கள் நகை வாங்கும்போது குறைந்தது 10% வரை செய்கூலி மற்றும் சேதாரம் கொடுத்திருப்பார்கள். நகையை உருக்கும்போது இந்த செய்கூலி முதலீடு முழுமையாக வீணாகிவிடும் என்பதால், நடுத்தர மக்கள் தங்களின் நகைகளை இந்த திட்டத்தில் கொடுக்க முன்வர மாட்டார்கள் என்று ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.

இந்தியாவின் மொத்த தங்க இருப்பான 30,000 டன்களில், சுமார் 29,900 டன்கள் நகைகளாகத்தான் மக்கள் வசம் இருக்கின்றன. வெறும் 100 டன் அளவில்தான் நாணயங்களும் பிஸ்கட்டுகளும் புழக்கத்தில் இருக்க வாய்ப்புள்ளது. சாதாரண மக்கள் தங்களின் அவசர தேவைகளுக்காகவும், பாதுகாப்பிற்காகவும் மட்டுமே சிறுக சிறுக நகைகளைச் சேர்த்து வைக்கிறார்கள். ஒருவேளை பெரிய அளவில் பிஸ்கட்டுகளை வைத்திருப்பவர்கள் கூட, வருமான வரித்துறை மற்றும் அரசின் கெடுபிடிகளுக்கு பயந்து அதை வெளியே கொண்டு வர தயங்குவார்கள் என்பதால் அரசின் எதிர்பார்ப்பு பலிக்காது.

மக்கள் தங்களின் பணத்தை வங்கிகளில் நிலையான வைப்புத் தொகையாக (FD) வைப்பதை விட தங்கத்தில் முதலீடு செய்ய முக்கிய காரணம் பணவீக்கம் தான். வங்கியில் ரூ.10,000 டெபாசிட் செய்தால் அடுத்த ஆண்டு ரூ.10,700 கிடைத்தாலும், பொருட்களின் விலையும் பணவீக்கமும் அதைவிட அதிகமாக உயர்ந்துவிடுகிறது. இதனால் வங்கியில் பணம் வைத்தால் நஷ்டம் என்று கருதும் மக்கள், பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை தேர்வு செய்கிறார்கள். கடந்த 5 முதல் 6 ஆண்டுகளில் தங்கம், வங்கியின் FD வட்டி விகிதங்களை விடவும், ஏன் அண்மை காலங்களில் நிஃப்டி பங்குகளை விடவும் மிக அதிக லாபத்தை தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது முன்னணி வங்கிகளில் மக்கள் பணம் டெபாசிட் செய்வது குறைந்து, தங்கம் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளுக்குப் பணம் டைவர்ட் ஆவதால் வங்கிகள் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. இந்த புதிய தங்க நகை சேமிப்பு திட்டத்தில் வெறும் 2% முதல் 2.5% வட்டிக்கு ஆசைப்பட்டு, உங்களிடம் இருக்கும் அசல் தங்கத்தை அரசிடம் ஒப்படைப்பது மிகப்பெரிய ரிஸ்க் ஆகும். கரன்சி மீதான நம்பிக்கை இல்லாததால் மக்கள் தங்கத்தை தரமாட்டார்கள் என்றும், வட்டிக்கு ஆசைப்பட்டு அசல் தங்கத்தையே இழக்கும் சூழல் வரலாம் என்றும் ஆனந்த் சீனிவாசன் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

SATHISH R

Recent Posts

“வெயில் தாங்க முடியல… வாட்டர் அடிங்க…” போலீஸிடம் கோரிக்கை வைத்த மாணவர்கள்…! போராட்டக் களத்தில் டான்ஸ் ஆடி… இணையத்தை கலக்கும் சுவாரஸ்ய வீடியோ…!!

பீகார் மாநிலம் பாட்னாவில் நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது. கடுமையான…

1 மணத்தியாலம் ago

முதல்வருக்கு ஜனநாயகன் தானே முக்கியம்….! அரசு மருத்துவமனையில் தொடரும் அவலம்…. மக்களின் நிலையை கண்டு கொதித்த எடப்பாடி பழனிச்சாமி…!!

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 68 வயது மூதாட்டியின் கால் விரலை எலி கடித்த சம்பவம்…

1 மணத்தியாலம் ago

லோனாவாலாவில் நடுக்கம்…! பள்ளத்தாக்கில் விழுந்து மர கிளையில் சிக்கிய இளைஞர்….! வைரலாகும் திக் திக் வீடியோ…!!

மகாராஷ்டிர மாநிலம் லோனாவாலா அருகே பெய்து வரும் கனமழைக்கு இடையே மலைப் பகுதியில் உலா வந்த இளைஞர் ஒருவர், எதிர்பாராதவிதமாகத்…

2 மணத்தியாலங்கள் ago

“நான் அவரை கொன்னுட்டேன்… என்னை அரெஸ்ட் பண்ணுங்க…” போதையில் தூங்கிய நபர்… விடிந்ததும் காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் சம்பவம்…!!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த சேட்ராஜ் மற்றும் அவரது பக்கத்து வீட்டுக்காரர் ராமலிங்கம் இடையே நிலம் தொடர்பாக நீண்டநாட்களாகப்…

2 மணத்தியாலங்கள் ago

“போதைப்பொருள் வைச்சுருக்கிய…” மாணவர்கள் மீது பொய் வழக்கு… “உங்க வாழ்க்கையையே அழிச்சிருவேன்…” மிரட்டிய மும்பை போலீஸ்… இணையத்தை உலுக்கும் பகீர் வீடியோ…!

மும்பையில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தின் போது, கைதான மாணவர்களைப் பொய் போதைப்பொருள் வழக்கில் சிக்க வைப்பதாக மிரட்டிய காவலர் மீது…

2 மணத்தியாலங்கள் ago

“யார்கிட்டயும் சொல்லக்கூடாது பாப்பா…” 20 ரூபாய் கொடுத்து மாணவியை மிரட்டிய நடத்துனர்…. தாயிடம் சொல்லி அழுத மகள்…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்….!!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த 14 வயது பள்ளி மாணவி, தினமும் அரசு பேருந்தில் பள்ளிக்குச் சென்று வந்துள்ளார்.…

2 மணத்தியாலங்கள் ago