இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினந்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரிக்கை விடுத்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி தொடர் மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிலும் குறிப்பாக ஆன்லைன் மோசடி என்பது தற்போது அதிகமாகவே உள்ளது. பெரும்பாலும் ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகள் என்பது தற்போது அதிகமாக இருக்கும் சூழலில் இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் மோசடிக்காரர்கள் மக்களுக்கு பலவிதமான லிங்குகளை அனுப்பி அதன் மூலமாக பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இப்படியான நிலையில் மின் கட்டணம் தொடர்பாக போலி எஸ் எம் எஸ் உலா வருவதால் இதுபோன்ற போலியான லிங்க் மூலம் பில் கட்டி ஏமாற வேண்டாம் என்று மின்சார வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது. அதனைப் போலவே அதிகாரப்பூர்வமற்ற இணையதள லிங்குகளில் இருந்து மெசேஜ் வந்தாலும் அவற்றை தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு சொந்தமான TNEB செயலி மற்றும் அதிகாரபூர்வ இணையதளங்களில் மட்டுமே மின்சார கட்டணத்தை செலுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…