தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர்தான் எச். வினோத். சதுரங்க வேட்டை திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான இவர் அதன்பிறகு கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தை இயக்கினார். இவர் இயக்கிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தொடர்ந்து அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு போன்ற படங்களை அடுத்தடுத்து இயக்கி வெற்றி கொடுத்தார். இதனைத் தொடர்ந்து தற்போது தளபதி விஜயை வைத்து அவருடைய கடைசி படமான ஜனநாயகன் திரைப்படத்தை வினோத் இயக்கி வருகின்றார். இந்தத் திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது.
இப்படியான நிலையில் விஜய்யை தொடர்ந்து தனுஷ் நடிக்கும் திரைப்படத்தை ஹெச். வினோத் இயக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் விதை அடுத்த ஆண்டு இறுதியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது குபேரா மற்றும் இட்லி கடை ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துவிட்ட தனுஷ் அடுத்ததாக ஒரு ஹிந்தி படத்திலும், மாரி செல்வராஜ் இயக்கும் படங்களிலும் நடிக்கின்றார். மேலும் சில படங்களில் கமிட் ஆகியுள்ள நிலையில் இந்த படங்களை முடித்த கையோடு எச் வினோத் படத்தில் தனுஷ் நடிப்பார் என தெரிகிறது.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…