விஜய்யை தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கப் போகும் ஹீரோ இவரா?.. யாரும் எதிர்பார்க்காத கூட்டணியா இருக்கே..!

By Nanthini on ஆனி 9, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர்தான் எச். வினோத். சதுரங்க வேட்டை திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான இவர் அதன்பிறகு கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தை இயக்கினார். இவர் இயக்கிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தொடர்ந்து அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு போன்ற படங்களை அடுத்தடுத்து இயக்கி வெற்றி கொடுத்தார். இதனைத் தொடர்ந்து தற்போது தளபதி விஜயை வைத்து அவருடைய கடைசி படமான ஜனநாயகன் திரைப்படத்தை வினோத் இயக்கி வருகின்றார். இந்தத் திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது.

அடுத்து எச் வினோத் இயக்கத்தில் தனுஷ் நடிக்கிறார் cinejosh.com

   

இப்படியான நிலையில் விஜய்யை தொடர்ந்து தனுஷ் நடிக்கும் திரைப்படத்தை ஹெச். வினோத் இயக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் விதை அடுத்த ஆண்டு இறுதியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது குபேரா மற்றும் இட்லி கடை ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துவிட்ட தனுஷ் அடுத்ததாக ஒரு ஹிந்தி படத்திலும், மாரி செல்வராஜ் இயக்கும் படங்களிலும் நடிக்கின்றார். மேலும் சில படங்களில் கமிட் ஆகியுள்ள நிலையில் இந்த படங்களை முடித்த கையோடு எச் வினோத் படத்தில் தனுஷ் நடிப்பார் என தெரிகிறது.