பொதுவாக மாம்பழத்தை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடாது என்ற கருத்தானது மக்களிடையே உள்ளது. இதனால் மாம்பழம் பிடித்தும் சர்க்கரை நோய் இருப்பதால் நிறைய பேர் மாம்பழம் சாப்பிடாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையிலேயே சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா? சாப்பிடக்கூடாதா? என்பது குறித்து உணவு ஆலோசகர் ஒருவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விரிவாக விளக்கி உள்ளார். அதாவது பொதுவாக இனிப்பாக இருக்கும் பொருட்களை உட்கொண்டால் சர்க்கரை நோய் வந்துவிடும் என்று ஏராளமான பேர் நினைக்கிறார்கள். அதே சமயம் சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை நிறைந்த பொருட்களை உட்கொண்டால் தீவிரமாகிவிடும் என்றும் நினைக்கிறார்கள்.
முக்கியமாக சர்க்கரை நோயாளிகள் மாம்பழத்தை சாப்பிடக்கூடாது என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் நூறு கிராம் மாம்பழத்தில் 60 கலோரிகளும், 15 கிராம் கார்போஹைட்ரேட் 1.5 கிராம் நார்ச்சத்து உள்ளது. இந்த 15 கிராம் கார்போஹைட்ரேட்டில் 8 -9 கிராம் சுக்ரோசும் , 4-5 கிராம் அளவில் புருக்டோஸும், 2 கிராம் குளுக்கோஸும் உள்ளது. அதே சமயம் 100 கிராம் சாதத்தை எடுத்துக்கொண்டால் அதில் 130 கலோரி, 28 கலோரி கார்போஹைட்ரேட், நார்ச்சத்து எதுவுமே இல்லை. இதில் பெரும்பாலும் மாவுச்சத்து தான் உள்ளது.
எனவே சாதாரண சாதத்தோடு ஒப்பிடும்போது மாம்பழம் பாதிக்கு பாதி தான் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். இதில் இனிப்பு இல்லை என்று நினைக்கும் சில பழங்களோடு ஒப்பிடுகையிலும் மாம்பழத்தில் உள்ள சர்க்கரை விட 10 சதவீதம் தான் குறைவான அளவில் சர்க்கரை உள்ளது. எனவே மிதமான ரத்த சர்க்கரை உடையவர்கள் உணவில் ஓரளவு கட்டுப்பட்ட பின்பற்றி வருபவராக இருந்தால் 100 கிராம் சாதத்தை சாப்பிடுவதை விட 100 கிராம் மாம்பழத்தை சாப்பிடலாம். HbA1c அளவு 10-க்கு மேல் இருப்பவராக இருந்தால் எந்த வகையான மாவுச்சத்தையும் எடுத்துக் கொள்ளக்கூடாது.
View this post on Instagram
