சத்யராஜ் சாப்பிடும் முறை இதுவா… 70 வயது ஆன பின்பும் கடைபிடிக்கும் பழக்கம்…

By admin on ஆவணி 14, 2024

Spread the love

கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்தவர் நடிகர் சத்யராஜ். இவரின் இயற்பெயர் ரங்கராஜ் என்பதாகும். சிறுவயதிலிருந்தே சினிமாவில் நடிகனாக வேண்டும் என்ற கனவை கொண்டிருந்தவர் சத்யராஜ். எம்ஜிஆரின் தீவிர ரசிகனாக இருந்தார் சத்யராஜ். அதுவே அவரை நடிகனாக வேண்டும் என்று தூண்டியது. சினிமாவில் நுழைய திட்டமிட்ட சத்யராஜ் தனது படிப்பை முடித்தவுடன் சென்னைக்கு குடி பெயர்ந்தார்.

ஆரம்பத்தில் நாடக குழுவில் சேர்ந்து நடிப்பை கற்றுக்கொண்ட சத்யராஜ், 1978 ஆம் ஆண்டு ‘சட்டம் என் கையில்’ திரைப்படத்தில் தோன்றி அறிமுகமானார். 1980களின் ஆரம்ப கட்டத்தில் பல திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்தார் சத்யராஜ்.

   

சத்யராஜின் கல்லூரி கால நண்பன் தான் இயக்குனர் மணிவண்ணன். 1984 முதல் 2013 வரை சுமார் 25 படங்கள் சத்யராஜை வைத்து இயக்கியுள்ளார் மணிவண்ணன். சத்யராஜ் கதாநாயகனாக நடித்த முதல் படம் ‘ரசிகன் ஒரு ரசிகை’ திரைப்படமாகும். இந்த படம் 1986 ஆம் ஆண்டு வெளியானது. அதே ஆண்டில் இவர் நடித்த ‘கடலோர கவிதைகள்’ திரைப்படம் வெற்றி பெற்று பிரபலமானார் சத்யராஜ்.

   

 

தொடர்ந்து ‘மிஸ்டர் பரத்’, ‘பாலைவன ரோஜாக்கள்’, ‘திருமதி பழனிச்சாமி’, ‘மக்கள் என் பக்கம்’, ‘நடிகன்’, ‘ரிக்ஷா மாமா’, ‘வால்டர் வெற்றிவேல்’, ‘தாய்மாமன்’, ‘அமைதிப்படை’ போன்ற பல வெற்றி படங்களில் நடித்துள்ளார் சத்யராஜ்.

2000 களின் ஆரம்ப கட்டத்தில் பல நகைச்சுவை கலந்த திரைப்படத்தில் நடித்தார் சத்யராஜ். பின்னர் 2015 ஆம் ஆண்டு பிரபாஸ் நடித்த பாகுபலி திரைப்படத்தில் கட்டப்பாவாக நடித்ததன் மூலம் பான் இந்தியா நடிகராக ஆனார் சத்யராஜ். எந்த கதாபாத்திரமானாலும் அந்த கதாபாத்திரத்தோடு ஒன்றி பிரமாதமாக நடிப்பவர் சத்யராஜ்.

எதார்த்தமான நடிப்பை வழங்கும் சத்யராஜிடம் ஒரு நல்ல பழக்கம் இருந்தது. அது என்னவென்றால் சத்யராஜ் சாப்பிடும் போது அவரது தட்டை கழுவவே வேண்டாமாம். ஏனென்றால் தட்டை நன்றாக வழித்து சாப்பிட்டு விடுவாராம். உணவை ரசித்து ருசித்து சாப்பிடுவாராம். என்னதான் வசதியான குடும்பத்தில் சத்யராஜ் பிறந்திருந்தாலும் எந்த நேரத்திலும் உணவை வீணடிக்கவே மாட்டாராம். தற்போது 70 வயதாகும் சத்யராஜ் இன்றும் அந்த பழக்கத்தை கடைப்பிடித்து வருகிறார். பல நடிகர்களுக்கு முன்மாதிரியாகவும் இருந்து வருகிறார் சத்யராஜ்.