மீண்டும் சூப்பர் ஸ்டாருடன் மோதும் தல அஜித்.. எது எப்படி போனாலும் அஜித்துக்கு கவல இல்ல..!!

By admin on ஆவணி 14, 2024

Spread the love

அல்டிமேட் ஸ்டார் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் பிஸியாக நடித்துள்ளார். அதே நேரம் மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தின் இறுதி கட்ட ஷூட்டிங்கிலும் கலந்து கொண்டுள்ளார். சொல்லப்போனால் பல வருடங்கள் கழித்து இரண்டு பட ஷூட்டிங்கில் கலந்துகொண்டு அஜித் தீவிரமாக உழைக்கிறார்.

   

16-ஆம் தேதி உடன் விடாமுயற்சி படத்தின் முழு ஷூட்டிங் முடிவடைகிறது. இதேபோல 24-ஆம் தேதி குட் பேட் அக்லி படத்தின் ஒரு கட்ட படப்பிடிப்பு முடிவடைகிறது. இந்த படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. வருகிற பொங்கலுக்கு குட் பேட் அக்லி திரைப்படத்தை ரிலீஸ் செய்யலாம் என பட குழுவினர் திட்டமிட்டனர்.

   

 

இந்த நிலையில் கொஞ்சம் தாமதமாக ஏப்ரல் 14-ஆம் தேதி குட் பேட் அக்லி திரைப்படத்தை ரிலீஸ் செய்யலாம் என திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதே தேதியில் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி திரைப்படத்தையும் ரிலீஸ் செய்யப்பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இதுக்கு முன்பு சூப்பர் ஸ்டாரின் பேட்ட அஜித்தின் விசுவாசம் ஆகிய படங்கள் ஒரே தேதியில் ரிலீஸ் ஆனது.

குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் 14-ஆம் தேதி ரிலீசானால் ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்துடன் மோதும். எது எப்படி இருந்தாலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பொறுத்தவரை ஒரு படத்தில் நடித்து விட்டால் அந்த படத்தின் பிரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபடுவார். ஆனால் அஜித் ஒரு படத்தில் நடித்து முடித்தவுடன் தனது கடமை முடிந்து விட்டது என பிரமோஷன் பணிகளில் கலந்து கொள்ள மாட்டார்.