FLASH NEWS: அதிகாலையிலையே கோர விபத்து…15 பேர் துடிதுடித்து பலி… 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம்…!

By Nanthini on மார்கழி 12, 2025

Spread the love

ஆந்திராவின் அல்லூரி மாவட்டத்தில் சாலையோர பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 15 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளன. அதில் சிலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் ஆன்மீக சுற்றுலாவாக பத்ராச்சலம் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது அதிகாலை இந்த கோர விபத்து நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.