உங்கள் கையில் பணம் தங்காமல் போவது ஏன்? சாணக்கியர் சொல்றதை கொஞ்சம் கேளுங்க!

By Elango on மார்கழி 12, 2025

Spread the love

பணம் எவ்வளவு சம்பாதித்தாலும் கையில் தங்குவதில்லை என்று புலம்புபவர்களே நம்மில் அதிகமாக உள்ளனர். நீங்கள் செல்வந்தராக வாழ சாணக்கியர் காட்டும் வழிமுறைகள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள். உங்களிடம் பணம் தங்காமல் போக என்னென்ன காரணம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

செலவை கட்டுப்படுத்துங்கள் – யாருடைய செலவு வருமானத்தை விட அதிகமாக உள்ளதோ அவர்களின் நிதி வாழ்க்கை எப்போதும் நிலையற்றதாகவே இருக்கும் என்கிறார் சாணக்கியர்.

   

பணத்தை வெளிக்காட்டிக் கொள்ளாதீர்கள் – மற்றவர்களுக்கு காட்ட பணம் செலவழிப்பது முட்டாள்தனம். பணத்தை சரியாக பயன்படுத்துங்கள் என்பதும் சாணக்கியர் சொல்லும் முக்கிய அறிவுரை.

   

முதலீடு – எங்கு பணம் முதலீடு செய்யப்படுகிறதோ அங்குதான் பணம் பெருகும். தவறான இடத்தில் முதலீடு செய்வது நஷ்டத்தை ஏற்படுத்தும். சம்பாதிப்பது மட்டும் போதாது. பணத்தை தக்க வைத்துக் கொள்வதும் மிகவும் முக்கியம்.

 

நிதி ஆலோசனை – பணம் நிர்வாகம் குறித்த நிதி ஆலோசனைகளை பெறுங்கள். மாதாந்திர சேமிப்புகளை செய்யுங்கள். பணத்தை தக்க வைக்க அறிவு வேண்டும் என்கிறார் சாணக்கியர். எனவே பணத்தை சிக்கனமாக பயன்படுத்துவது சேமிப்பது தக்க வைப்பது என முக்கிய அறிவுரை சாணக்கியர் தந்திருக்கிறார்.