ஆந்திர பிரதேச முதலமைச்சர் திரு. சந்திரபாபு நாயுடு அவர்கள், ஒவ்வொரு தம்பதியினரும் குறைந்தபட்சம் மூன்று குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார். திருப்பதியில் நடைபெற்ற பாரதிய விஞ்ஞான் சம்மேளனத்தில் பேசிய அவர், தென்னிந்திய மாநிலங்களில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைந்து வருவதால், எதிர்காலத்தில் உழைக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து, முதியவர்களின் எண்ணிக்கை அதிகமாகும் அபாயம் உள்ளது.
தென்னிந்தியாவின் பிறப்பு விகிதம் தேசிய சராசரியான 2.1-ஐ விடக் குறைந்து 1.6-க்குச் சென்றுவிட்டது. இதை ஈடுகட்ட தம்பதிகள் அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். இதற்கு முன் இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற விதி இருந்தது. ஆனால், தற்போது அதனை நீக்கிவிட்டு, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் இருப்பவர்கள் மட்டுமே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற புதிய சட்டத்தைக் கொண்டு வர ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது. அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்குப் பல்வேறு ஊக்கத்தொகைகள் மற்றும் சலுகைகளை வழங்கவும் அரசு ஆலோசித்து வருகிறது
ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வீரமணிக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, பாதிக்கப்பட்ட சிறுமிகள் அளித்த புகார்களின் பேரில் தமிழ்நாடு…
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வாடகை செலுத்த முடியாத நிலையில் இருந்த நபர் ஒருவர், ரூ.500 கள்ளநோட்டுகளை அச்சடித்ததாகக் கூறப்படும் சம்பவம்…
கேரள மாநிலம் கொச்சி சேரநல்லூர் பகுதியில், கூடுதல் அமர்வு நீதிபதி ஒருவரின் 17 வயது மகன் ஓட்டிச் சென்ற மெர்சிடிஸ்…
திரைப்படப் பின்னணிப் பாடகி சின்மயி, தான் திரையுலகில் பிரபலமாவதற்கு முன்பு தன் தாயாருடன் சேர்ந்து வாடகை வீடு தேடிய தருணங்களில்…
சென்னை திருவேற்காடு சுந்தரசோழபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகள்களான பிரியங்கா மற்றும் பிரியதர்ஷினி ஆகிய இருவரும் 15 வயதுடைய…
பீகார் மாநிலம் கயாவில் உள்ள சந்தௌதி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காந்தி நகர் பகுதியில், நிலத்தகராறு காரணமாக பெரும் கலவரம்…