ரூ.4,730 கோடி விவகாரம்… மணல் குவாரிகளை குறிவைத்த DVAC… அதிகாரிகளுக்கு பறந்த சம்மன்… தமிழக மணல் குவாரிகளில் பரபரப்பு…!!

By Gayathri on ஐப்பசி 6, 2026

Spread the love

தமிழகத்தில் ஆற்றுமணல் குவாரிகளில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விரிவான விசாரணையை தொடங்கியுள்ளது. அமலாக்கத்துறை அளித்த புகாரின் அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ள இந்த விசாரணையில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மணல் எடுக்கப்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன.

தமிழகம் முழுவதும் 28 மணல் குவாரிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மற்றும் தொழில்நுட்ப தரவுகளின் அடிப்படையில், சட்டவிரோதமாக எடுக்கப்பட்ட மணலின் மதிப்பு சுமார் ரூ.4,730 கோடி என அமலாக்கத்துறை மதிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. GPS உள்ளிட்ட தொழில்நுட்ப தகவல்களைக் கொண்டு, சில இயந்திரங்கள் அனுமதிக்கப்பட்ட எல்லைகளுக்கு வெளியேயும் செயல்பட்டதாக விசாரணையில் கூறப்பட்டுள்ளது.

   

இந்த விவகாரத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் ஒப்பந்ததாரர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் DVAC தரப்பில் விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது. ஏற்கனவே அமலாக்கத்துறை நடத்திய சோதனைகளில் பணம், தங்கம் மற்றும் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது DVAC விசாரணை எந்த திசையில் நகர்கிறது, மேலும் யார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பது அடுத்த கட்டத்தில் தெரியவரும்.