இப்படி நடக்குமா?… “அப்பா மேல கை வைக்காதீங்க!”… கதறிய 3 வயது பிஞ்சு… நடு இரவில் கணவருக்கு நடந்த கொடூரம்… அம்பலமான சதித்திட்டம்…!!

By Gayathri on ஐப்பசி 28, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்தில் அறிமுகமான பிரதாப் என்பவருடன், பிரியா சர்மா என்ற பெண்ணுக்குப் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக உருவெடுத்தது. புதிய காதலனை முறைப்படி கரம் பிடிக்க விரும்பிய பிரியா, தனது திருமண வாழ்க்கைக்குத் தடையாக இருந்த கணவர் ஷஷாங்கை தீர்த்துக்கட்டக் கொடூர திட்டம் தீட்டினார். அதன்படி, இந்திராபுரத்தில் கணவரைத் தனிமையில் வழிமறித்த இருவரும், கத்தியால் அவரைத் சரமாரியாகக் குத்திப் படுகொலை செய்ய முயன்றனர்.

தங்களின் குற்றத்தை மறைத்து, வழக்கை திசைதிருப்பும் நோக்கில் இதனை மர்ம நபர்கள் நிகழ்த்திய கொள்ளைச் சம்பவம்போல் நாடகமாட அவர்கள் முயன்றனர். ஆனால், தாயின் இந்த ஈவுஇரக்கமற்ற கொடூரச் செயலை அவர்களின் மூன்று வயது பிஞ்சு மகள் நேரில் கண்டு பேரதிர்ச்சி அடைந்தாள். படுகாயமடைந்த கணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், பிரியா மற்றும் அவரது காதலன் பிரதாப் மீது கொலை முயற்சிப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.