90 காலகட்டத்தில் உச்சத்தில் இருந்த பிரபல நடிகை.. படம் தயாரிக்க ஆசைப்பட்டு வீட்டையே பறி கொடுத்த சோகம்..

By Ranjith Kumar

Updated on:

தொடை அழகியாக தமிழ் இந்திய சினிமா துறையில் வலம் வந்தவர் தான் ரம்பா, இவர் 90 மற்றும் 2000 காலகட்டத்தில் முன்னணி கதாநாயகியாக வளம் வந்து இந்தியா துறையே ஒரு கை பார்த்த இவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, போஜ்புரி போன்ற பல மொழிகளில் நடித்து வெவ்வேறு மொழிகளில் உள்ள சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்து பணியாற்றி பல ரசிக கூட்டங்களை தன் பின்னால் அமைத்தவர். 1992 வெளியான “சர்கம்” என்ற மலையாள படத்தின் மூலமாக சினிமாத்துறைக்கு அறிமுகமானார்,

இவர் நடித்த முதல் படமே மெகா ஹிட் ஆகி இவர் அனைத்து இயக்குனர்களின் கண்களில் பட்டு பிரபலமானார். அவர் நடித்த முதல் படத்தில் அவருக்கு 15 வயது தான் என்பது குறிப்பிடத்தக்க விஷயம். 1993 ஆம் ஆண்டு தமிழ் திறை உலகில் முதல்முறையாக அறிமுகமான படம் “உழவன்”. இப்படத்தில் “பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ” என்ற பாடல் மூலம் பட்டி தொட்டி எல்லாம் வெளுத்து மாபெரும் பிரபலமானார் என்பது முக்கியமான விஷயம். அதன் பின்னதாக சுந்தர்.சி மூலமாக தான் தமிழ் திரை உலகில் ஹீரோயின் ஆக அறிமுகமானார்.

   

சுந்தர் சி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான “உள்ளத்தை அல்லதா” படத்தின் மூலம் தான் அறிமுகமானார். செங்கோட்டை, காதலா காதலா, சுந்தர புருஷன், நெஞ்சத்தை அல்லதான், மின்சார கண்ணா போன்ற படங்கள் மூலமாக முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்தார். இதன் பின்னதாக இவர் தொடை அழகி ரம்பா என்று பட்டப்பெயர் வைத்து கூப்பிடும் அளவிற்கு மெகா ஹிட் அடித்தார். ஹீரோயினாக வலம் வந்து தமிழ் திரையில் உள்ள சூப்பர் ஸ்டார் ஆன ரஜினி, கமல், விஜய், அஜித், கார்த்தி, பிரசாந்த் போன்ற பல பிரபலங்களுடன் நடித்து பல ஹீரோயின்களின் சான்சை இவர் நடிப்பால் தட்டி பறித்து தணக்கென்று ஒரு இடத்தை பெற்றிருந்தார்.

ஆனால் இவர் இந்த வளர்ச்சி பத்தாது என்று அடுத்த கட்டமாக நகர்வதற்கு படங்களை நடிப்பதை விட்டுவிட்டு படங்களை வெளியிட முடிவு செய்தார். அங்கு தான் இவரின் சருக்கள் ஆரம்பித்தது, ஜோதிகா லைலா வைத்து இயக்கிய படம் தான் “த்ரீ ரோசஸ்”, படம் இயக்கி வெளிவந்த பிறகு பெரும் எதிர்பார்த்த அளவில் போகாததால் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் சரிவடைந்து ஒரு பெரிய கடனில் மூழ்கினார். அக்கடனை அடைப்பதற்கு மவுண்ட் ரோட்டில் உள்ள வீட்டை விற்று இந்த பிரச்சினை முடிவுக்கு கொண்டு வந்தார். அதன் பின் பல படங்கள் நடித்தும் பெரிய அளவு இவருக்கு போகவில்லை, இவர்களின் கடைசி படமான 2011 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த “ஃபிலிம் ஸ்டார்” படத்திற்குப் பிறகு இவர் சினிமா துறையில் முழுமையாக நின்று விட்டார். தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.

author avatar
Ranjith Kumar