சிறப்பாக நடந்த ‘கார்த்தி 27’ படத்தின் பூஜை.. கங்குவா லுக்கில் வந்திறங்கிய சூர்யா.. வைரலாகும் வீடியோ..

By Begam

Updated on:

நடிகர் சூர்யாவின் சகோதரரான கார்த்தி ”பருத்திவீரன்” படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படமே தேசிய விருது படமாக அவருக்கு அமைந்தது. இதைத்தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை என பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். இதை தொடர்ந்து மெட்ராஸ், தோழா, தீரன், கைதி என வித்தியாசமான கதைக்களங்களில் நடித்து பிரபலமானார்.

   

சிறந்த கதை தேர்வு, அருமையான நடிப்பு என மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார் கார்த்தி. இவர் நடிப்பில் கடந்த வருடம் மூன்று படங்கள் வெளியாகியது. அவை பொன்னியின் செல்வன், விருமன் மற்றும் சர்தார் இந்த மூன்று படங்களுமே வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது.

இதைத்தொடர்ந்து ‘ குக்கூ’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் ராஜூ முருகன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான கார்த்தியின் 25-வது படமான ஜப்பான் திரைப்படம் படுதோல்வியை சந்தித்த நிலையில், கடுமையான விமர்சனங்களையும் சந்தித்தது. இதைத்தொடர்ந்து அடுத்து தனது 26-வது படமாக நலன் குமாரசாமி இயக்கத்தில் ‘வா வாத்தியாரே’ என்ற படத்தில் நடித்துள்ளார். அடுத்ததாக 96 படத்தின் இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி தனது 27-வது படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடைசி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே மாதம் படம் வெளியாகும் என கூறப்படுகிறது. இத்திரைப்படத்தை தயாரிக்கும் சூர்யாவின் 2டி நிறுவனம் தற்பொழுது படத்தின் பூஜை வீடியோவை வெளியிட்டுள்ளது. இதில் கார்த்தி, சூர்யா, சிவகுமார், அரவிந்த் சாமி, ஜெய் பிரகாஷ் உள்ளிட்ட பிரபலங்கள் பட பூஜையில் பங்கேற்றுள்ளனர். இந்த படத்தில் ஸ்ரீதிவ்யா நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதோ அந்த வீடியோ…